ETV Bharat / state

பிரபல நடிகர் குடும்பத்துடன் சென்ற கார் விபத்து.. ஆத்திரத்தில் தகாத வார்த்தை; தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஜீவா! - jeeva car accident

நடிகர் ஜீவா குடும்பத்துடன் சென்ற கார் சின்னசேலம் அருகே விபத்துக்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக ஜீவா மற்றும் அவரது மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 7:33 PM IST

Updated : Sep 11, 2024, 9:01 PM IST

நடிகர் ஜீவாவின் கார் விபத்து
நடிகர் ஜீவாவின் கார் விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

கள்ளக்குறிச்சி : நடிகர் ஜீவா தன்னுடைய மனைவியுடன் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக சென்னைக்கு காரில் சின்னசேலம் அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறிது நேரம் இளைப்பாரி விட்டு எதிர் திசையில் காரில் கடந்த பொழுது, எதிர் திசையில் சாலையைக் கடப்பதற்காக இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்தது.

நடிகர் ஜீவா குடும்பத்துடன் சென்ற கார் விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால், இருசக்கர வாகனம் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக, ஜீவா சுதாரிப்புடன் காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக ஜீவா மற்றும் அவரது மனைவி லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதையும் படிங்க : ஹேமா கமிட்டி அறிக்கை; ஆவேசமடைந்த ஜீவா.. பிரஸ் மீட்டில் நடந்தது என்ன? - jeeva controversy speech

இதையடுத்து மாற்று கார் மூலமாக ஜீவா தன்னுடைய மனைவியுடன் சேலத்திற்கு சென்றார். இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய காரை பறிமுதல் செய்து, விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நடிகர் ஜீவாவிற்கு அடிபட்டது என தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு ஏராளமானோர் கூடினர். அப்போது ஒருவர் இது ஜீவா தானா? என திரும்பும்படி கேட்டுள்ளார். அதற்கு ஜீவா அவரிடம் கோபத்துடன் தகாத வார்த்தையால் திட்டியதால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கனவே, தேனியில் ஜவுளிக்கடை திறப்பு விழாவில், ஹேமா கமிட்டி பற்றி ஜீவாவிடம் கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் உனக்கு அறிவு இருக்கா? என திட்டி பெரும் சர்ச்சைக்குள் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Sep 11, 2024, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.