ETV Bharat / state

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! - CM MK STALIN

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறைரீதியான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த துறை ரீதியான ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 9, 2025 at 3:57 PM IST

1 Min Read

சென்னை: அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாகவும், நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன்.9) துறைரீதியான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பொதுப்பணித்துறை சார்பில் திருச்சி மற்றும் கோவையில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் பணிகள், கலைஞர் பன்னாட்டு மையம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம், புதிய சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதே போல கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில் ரேசன் கடைகளை மேம்படுத்துவது, புதிய பணி நியமனங்களை மேற்கொள்வது, பொது விநியோக திட்ட செயல்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

  1. இதையும் படிங்க: தவெகவில் இணைந்த ஜேப்பியார் மருமகன்! முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூக்கு முக்கிய பொறுப்பு!
  2. இதையும் படிங்க: அரசு விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: “இனி ஒன்லி வாட்ச்வுமேன் தான்” - அமைச்சர் கீதா ஜீவன் உறுதி!

மின்சாரத்துறை சார்பில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைப்பது, மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நிறைவாக மக்கள் நல திட்டங்கள் பொதுமக்களுக்கு விரைவாக சென்று சேரும் வகையிலும், புதிய திட்டங்களை விரைவில் செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.