ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் 80 வயது மூதாட்டியை கஞ்சா போதையில் 19 வயது இளைஞர் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து, கீழே தள்ளிக் கொலை செயதார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் தாண்டவராயன். இவரது மனைவி சுசீலா (80). தம்பதி வசிக்கும் வீட்டை ஒட்டி அவர்களுக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது.
நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் சுசீலா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, கத்தியவாடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (19) என்பவர் அளவுக்கு அதிகமாக தலைக்கேறிய கஞ்சா போதையில் சுசிலா வீட்டு பின்புறமாக உள்ள மாந்தோப்பு பகுதிக்கு வந்துள்ளார். பின்னர், தோப்பில் இருந்த மூதாட்டி சுசீலாவை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டு கத்தியதால் கஞ்சா போதையில் இருந்த நந்தகுமார் மூதாட்டி சுசீலாவை கீழே தள்ளி விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதால் மூதாட்டியின் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதில், மூதாட்டி சுசிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து ஆற்காடு நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: "கோவில்பட்டியில் அடுத்தடுத்து பெண் உள்பட இருவர் வெட்டிக்கொலை" - 8 பேர் அதிரடி கைது; 6 பேருக்கு வலை!
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, இளைஞர் நந்தகுமார் மூதாட்டியை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து போலீசார் நந்தகுமாரை கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்