தேனி: கிளப் என்ற பெயரில் அனுமதியின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி நகராட்சி பகுதிகளில் ’கிளப்’ என்ற பெயரில் சூதாட்டம் நடைபெறுவதாக தேனி நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தேனியில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கிளப்பில் சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணத்தை வைத்து சீட்டுக்கட்டுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: திருமணம் ஆகாத ஆண்களே உஷார்! 2010 முதல் பெண் தலைமையில் உலா வரும் மோசடி கும்பல்!
இதனைத்தொடர்ந்து தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காலி இடத்தில் சீட்டுக்கட்டுடன் சூதாட்டம் நடத்திய நபர்களையும் பிடித்து போலீசார் அழைத்துச் சென்றனர். வெவ்வேறு இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட 12,880 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.