ETV Bharat / state

புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா இறுதி ஒத்திகை! - Independence Day Parade Rehearsal

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 3:07 PM IST

Independence Day Parade Rehearsal: இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாளை மறுநாள் நாட்டின் நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் மூன்றாவது நாள் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்வில் தமிழக காவல் துறையின் பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவது போன்று நிகழ்த்தி காட்டப்பட்டது.

ஏற்கனவே கடந்த 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் படை, தீயணைப்புப் படை உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசியக்கொடியை ஏற்றுவது போன்ற இறுதி ஒத்திகை நிகழ்வும் நடைபெற்றது.

சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ள தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போல ஒத்திகை நிகழ்வுகளும் நடைபெற்றன. சுதந்திர தின விழா இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதால் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான சாலை, காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு! - Tamil nadu Cabinet meeting

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.