ETV Bharat / state

தூத்துக்குடி வேன் விபத்து: "எல்லாரும் போய்ட்டாங்க மேடம்.." - தப்பிய இளைஞர் கனிமொழி எம்.பியிடம் கதறல்! - THOOTHUKUDI VAN ACCIDENT

தூத்துக்குடியில் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பியிடம் தப்பிய இளைஞர் கதறி அழுதார்.

ஆறுதல் கூறும் கனிமொழி எம்.பி
ஆறுதல் கூறும் கனிமொழி எம்.பி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2025 at 10:43 PM IST

4 Min Read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிந்தாமணி மீரான்குளம் ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் ஒன்று நேற்று (மே 17) மாலை திடீரென அருகில் உள்ள கிணற்றுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்தது. அந்த கிணற்றுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் வேன் உள்ளே விழுந்த நிலையில் தண்ணீருக்குள் மூழ்கியது.

கிணற்றுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்த வேன்

வேன் தண்ணீருக்குள் மூழ்குவதற்கு முன்பாக அதற்குள் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி வெளியே வந்தனர். அவர்கள் அந்த வழியாக சென்ற மக்களிடம் வேனுக்குள் தங்கள் குடும்பத்தினர் இருக்கிறார்கள், அவர்களை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கிணறு தண்ணீரால் நிரம்பி காணப்பட்டதால் தாமதம்

இந்த கிணறு 50 அடி ஆழம் கொண்டது என்பதாலும், கிணறு நிரம்பி காணப்பட்டதாலும் தீயணைப்பு துறையால் உடனடியாக வேனையும், அதன் உள்ளே இருந்த நான்கு பெரியவர்கள் மற்றும் ஒன்றரை குழந்தையை உடனே மீட்க முடியவில்லை. எனவே உடனடியாக தீயணைப்புத்துறையில் நன்கு பயிற்சிப் பெற்ற ஸ்கூபா வீரர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி 50 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்த வேனை கயிறு கட்டி பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்டனர்.

50 அடி ஆழத்தில் கிடந்த குழந்தை சடலம்

வேன் வெளியே கொண்டு வரப்பட்டபோது உள்ளே இருந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஒன்றரை குழந்தை மட்டும் வேனில் இல்லாததால் மீட்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் 50 அடி ஆழத்தில் சென்று கிணற்றின் அடியில் கிடந்த ஒன்றரை வயது பெண் குழந்தையின் சடலத்தையும் மீட்டு வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அங்கு முகாமிட்டனர். இதைத்தொடர்ந்து 5 பேர் உடல்களும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

ஆன்மீக பயணமாக வந்து உயிரிழப்பு

இது தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த மோசஸ், ரவி, கோவில் பிச்சை, கெஞ்சி அல்கிருபா, வசந்தா, ஜெர்சோன், ஜெஸிட்டா, ஷைனி கிருபாகரன், ஷாலினி(1.1/2) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வதற்காக வேனில் கோவையில் இருந்து கிளம்பி வந்துள்ளனர்.

தூக்க கலக்கத்தில் கட்டுப்பாடு இழப்பு

தனியாக ஓட்டுநர் நியமிக்காமல் அவர்களே வேனை ஒட்டி வந்துள்ளனர். முன்னதாக மதுரை, தேனி, திருநெல்வேலி, பாபநாசம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று மாலை சாத்தான்குளம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் தவிர அனைவரும் அயர்ந்து தூங்கி உள்ளனர்.

அப்போது அதிக தூரம் ஓட்டிய களைப்பில் ஓட்டுநரும் தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் வேன் தலைக்குப்புற கவிழ்ந்து அருகில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. சுமார் பத்து நிமிடம் வேன் தண்ணீரில் மூழ்காமல் மிதந்துள்ளது. அப்போது கதவு மற்றும் ஜன்னலுக்கு அருகில் இருந்ததால் ஜெர்சோன், ஜெஸிட்டா, சைனிக் கிருபாகரன் ஆகிய 3 பேர் மட்டும் உயிர் தப்பி வெளியே வந்துள்ளனர்.

சீட் பெல்ட் அணிந்திருந்ததால் சிக்கல்

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் கண்முன்பே வேன் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. அதன் பிறகு அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர். மேலும், வேனுக்குள் மாட்டிக் கொண்ட மீதமுள்ள நபர்கள் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் அவர்கள் வெளியே வர முடியாமல் போனதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 5 பேரின் உடல்களுக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்த மோசஸ் மகன் ஜெர்சோனுக்கு ஆறுதல் கூறினார். ஜெர்சோனின் ஒன்றரை வயது மகள் ஷாலினி இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் கனிமொழியிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

குடும்பத்துல எல்லாரும் போய்ட்டாங்க

கனிமொழி எம்.பியிடம் ஜெர்சோன் கூறும்போது, ''என் மகளை காப்பாற்ற முடியாமல் போச்சே மேடம். என் பக்கத்தில் தான் படுத்திருந்தாள். ஜன்னல் பக்கத்துல இருந்ததால் நான் வெளியே வந்துட்டேன். இல்லன்னா எப்படியும் அவளை காப்பாற்றி இருப்பேன். அம்மா, அப்பா, மாமா எல்லாரும் போய்ட்டாங்க.

இதையும் படிங்க: பாகிஸ்தான் முகத்திரையை கிழிக்க வெளிநாடு செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு; முழு விவரம்!

மாமா பொண்ணுக்கு இப்பதான் நிச்சயம் செய்து வச்சோம். நகை எல்லாம் எடுத்து வச்சோம். சந்தோஷமா பேசிட்டு வந்தோமே. ஒரே நாள்ல எல்லாரும் போயிட்டாங்க" என்று ஜெர்சோன் கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதன் பிறகு 5 பேர் உடல்கள் கோவைக்கு எடுத்து செல்லப்பட்டது.

கிணறு உரிமையாளருக்கு நோட்டீஸ்

வேன் விழுந்த கிணறு சாலையோரம் 25 அடி தூரத்தில் அமைந்துள்ளது. நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. எனவே இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினர் கிணற்றின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ''ஏன் சுற்றுச்சுவர் அமைக்கவில்லை?" என்பது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

கிணற்றுக்குள் இருந்த நகைகள் மீட்பு

வேனில் வந்த பெண்கள் கழுத்தில் அதிகளவு நகைகள் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இது தவிர தனியாக பை ஒன்றிலும் சுமார் 100 சவரனுக்கும் மேல் நகை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீர் மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு கிணற்றின் அடியில் இருந்த நகை பை மீட்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.