ETV Bharat / sports

பைனல்ல தோத்துட்டோம்தான் ஆனா... பஞ்சாப் அணியின் இளம்படை குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதென்ன? - RICKY PONTING ABOUT PBKS

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.

ரிக்கி பாண்டிங்,, சஷாங் சிங்
ரிக்கி பாண்டிங்,, சஷாங் சிங் (AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 4, 2025 at 2:34 PM IST

2 Min Read

அகமதாபாத்: இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இப்போட்டியில் மோதின. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

191 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரன்சிம்ரன் சிங் வழக்கம்போல் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். சஷாங் சிங் 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தபோதும், மிடில் ஆர்டரில் ரன்களை குவிக்க தவறியதால் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், பரபரப்பான இறுதிப் போட்டிக்கு பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிங்க: எங்கும் ‘இ சாலா கப் நம்தே’ முழக்கம் - பெங்களூருவை திணற விட்ட ஆர்.சி.பி ரசிகர்கள்!

அப்போது அவர்,"மிடில் ஆர்டரில் போட்டியை கொஞ்சம் அனுபவமில்லாமல் அணுகியதால் இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றியை நாங்கள் பறிகொடுக்க வேண்டியதானது. மற்றபடி இந்த தொடர் முழுவதும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும மகிழ்விக்கும் விதமாக எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளது. அணியின் தலைமைப் பயிற்சியாளராக பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த ஆட்டம் எனக்கு திருப்பி அளிக்கிறது. பிரன்சிம்ரன் சிங், பிரியான்ஸ் ஆர்யா, நேஹல் வதேரா போன்ற இளம்படையை இன்னும் கொஞ்சம் பட்டைத் தீட்டினால், நாளை அவர்கள் பஞ்சாப் அணிக்கு மிகப் பெரிய வெற்றிகளை தேடித் தருவார்கள் என்பதை இந்த தொடர் எங்களுக்கு உணர்த்தி உள்ளது," என்று பாண்டிங் உணர்ச்சி ததும்ப கூறினார்.

"இந்தத் தொடரில் தான் விளையாடியதிலேயே நல்ல பேட்டிங் பிச் இதுதான் (அகமதாபாத்) என்று ஆட்டத்தின் முடிவில் சஷாங் சிங் கூறினார். அப்படியிருந்தும் ஆட்டத்தின் கடைசியில் முக்கியமான சில ஓவர்களில் ரன்களை எடுக்க தவறியதுடன் முக்கியமான சில விக்கெட்டுகளையும் இழந்ததால் தோல்வியை தழுவினோம். சாக்குப்போக்குகள் எதையும் சொல்லாமல் இத்தோல்வியை நாங்கள் ஒப்புகொண்டுதான் ஆக வேண்டும்."

"இந்தத் தொடரில் ஒரு சிறப்பான வெற்றிக்குப் பிறகு (குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியது) அடுத்த நாளே இறுதிப் போட்டியில் களமிறங்கினோம். இப்போட்டியில் சிறு சறுக்கல் ஏற்பட்டதால் தோல்வியை சந்திக்க வேண்டியதானது. ஆனால், பஞ்சாப் அணியின் இந்த இளம்படையுடன் அடுத்த சீசனில் நாங்கள் மீண்டும் வலிமைமிக்க அணியாக திரும்பி வருவோம்." என்றும் ரிக்கி பாண்டிங் நம்பிக்கையுடன் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.