ETV Bharat / sports

டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்; கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ’கிங்’ கோலி! - RCB VS RR

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி ராஜஸ்தானுக்கு எதிராக 70 ரன்கள் அடித்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 25, 2025 at 7:55 AM IST

2 Min Read

பெங்களூரு: விராட் கோலி தனது அபாரமான இன்னிங்ஸ் மூலம் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். 18வது ஐபிஎல் தொடர் இந்தியா முழுவதும் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று ஐபிஎல் போட்டியில் ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஃபில் சால்ட், கோலி ஜோடி அதிரடியாக ஆடியது.

ஆரம்பம் முதலே பவுண்டரி, சிக்சர்களாக விளாசியது. ஃபில் சால்ட் 26 ரன்கள் எடுத்த நிலையில், ஹசரங்கா பந்தில் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் முதல் பந்து முதலே ராஜஸ்தான் பவுலர்களை சிதறடித்தார். கோலி, படிக்கல் ஜோடி ரன்மழை பொழிந்த நிலையில், ரன்கள் எகிறியது. இரண்டாவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் சேர்த்த நிலையில், கோலி 70 ரன்களுக்கு அவுட்டானார். இதனையடுத்து அரைசதம் அடித்த படிக்கல் சந்தீப் சர்மா பந்தில் 50 ரன்களுக்கு நடையை கட்டினார்.

கடைசி நேரத்தில் டிம் டேவிட் (23), ஜிதேஷ் சர்மா (20) அதிரடி காட்டிய நிலையில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், இளம் வீரர் சூர்யவன்சி நல்ல துவக்கத்தை அளித்தனர். இந்த நேரத்தில் சூர்யவன்சி 16 ரன்களுக்கு புவனேஷ்வர் பந்தில் போல்டானார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா (28), கேப்டன் பராக் (22) என சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

ஜெய்ஸ்வால் 49 ரன்களுக்கு அவுட்டான நிலையில், துருவ் ஜுரேல் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று அதிரடி காட்டினார். ஆனால் அவருக்கு கம்பெனி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயர் 11 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி கட்டத்தில் துருவ் ஜுரேல் 47 ரன்களுக்கு அவுட்டான நிலையில், பெங்களூரு வெற்றி கிட்டதட்ட உறுதியானது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்த நிலையில், பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: அம்பயர் 'அவுட்' கொடுக்காமல் வெளியேறிய இஷன் கிஷன்; வினோத செயலால் பாராட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

கிங் கோலி சாதனை: இப்போட்டியில் 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசிய கோலி, ஒரே மைதானத்தில் 3500 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். கோலி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டும் 3500 ரன்கள் குவித்துள்ளார். மேலும் நேற்று விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனது 111வது அரைசதத்தை கடந்தார். கோலி 391 இன்னிங்ஸில் 111 அரைசதங்கள் அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெயிலை (110) பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம்பிடித்தார். முதலிடத்தில் டேவிட் வார்னர் 117 அரைசதங்களுடன் உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.