ETV Bharat / sports

வினேஷ் போகத்துக்கு பாரத ரத்னா.. ராஜ்ய சபா எம்பி பதவி! வலுக்கும் கோரிக்கை! - Paris olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 8, 2024, 2:43 PM IST

Abhishek Banerjee on vinesh phogat: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பாரத ரத்னா விருது அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Etv Bharat
Vinesh Phogat (IANS Photo)

கொல்கத்தா: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பாரத ரத்னா விருது அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன்படி வினேஷ் போகத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அல்லது வினேஷ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யபட வேண்டுமென பதிவிட்டுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் அவரது விளையாட்டை யாராலும் மறுக்க முடியாது என்றும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உள்ள வினேஷ் போகத்திற்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றும் அபிஷேக் பானர்ஜி தெரிவித்து உள்ளார். வினேஷ் போகத்தின் திறமையயை நிரூபிக்க தனியாக பதக்கம் வேண்டியதில்லை என தான் நம்புவதாக அவர் கூறினார்.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு முன்னதாக அதிக எடையுடன் இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். போட்டிக்கு முன்பாக அவர் எடை போடும் போது குறிப்பிட்ட அளவை காட்டிலும் 100 கிராம் மட்டுமே வினேஷ் போகத் எடை அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு பதக்கம் மறுக்கப்பட்டது. இதனிடையே தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி வினேஷ் போகத் விளையாட்டு நடுவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் தோல்வி.. ஆனால் உலக சாம்பியன்ஷிப் வாய்ப்பை கைப்பற்றிய இந்திய வீரர்! - paris olympic 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.