ETV Bharat / sports

இந்திய தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து கேப்டன்! கேப்டனாக டாம் லாதம் நியமனம்! - Tim Southee Resign

டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் சவுதி விலகுவதாக அறிவித்ததை அடுத்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டாம் லாதம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

author img

By ETV Bharat Sports Team

Published : Oct 2, 2024, 12:20 PM IST

Etv Bharat
Tim Southee (AP Photo)

ஐதராபாத்: நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டிம் சவுதி அறிவித்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை அடுத்து டிம் சவுதி கேப்டன் பதிவியில் இருந்து விலகி உள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக 14 போட்டிகளில் கேப்டனாக இருந்த டிம் சவுதி அதில் 6 ஆட்டங்களில் வெற்றியும், 6ல் தோல்வியும், 2 டிரா கண்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியதை டிம் சவுதி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அண்மைக் காலமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் டிம் சவுதி, மீண்டும் பார்முக்கு திரும்ப கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

வங்கதேச தொடரை 2-க்கு 0 என கைப்பற்றிய நிலையில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதில் 3 ஆட்டங்களில் இந்திய வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

போட்டி அட்டவணை:

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 16ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதலாவது டெஸ்ட் அக்டோபர் 16 முதல் 20 வரை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் அக்டோபர் 24 முதல் 28ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறுகிறது.

3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 1 முதல் 5ஆம் தேதி வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து அதே நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியில் கலந்து கொண்டு விளையாடுகிறது.

இதையும் படிங்க: கேப்டன் பதவியை 2வது முறையாக துறந்த பாபர் அசாம்! இந்த முறை என்னக் காரணம்? - Babar Azam resigns captaincy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.