ஹைதராபாத்: இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று இரவு ஹைதராபாதில் நடைபெறும் 27வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்று மோசமான நிலையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி இளம் வீரர்கள் பட்டாளத்துடன் இந்த தொடரில் கலக்கி வருகிறது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பலவீனமான அணியாக பஞ்சாப் பார்க்கப்பட்ட நிலையில், பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஸ் ஆர்யா, வதேரா, சஷாங்க் சிங் என இளம் வீரர்கள் கலக்கி வருகின்றனர். இன்றும் இளம் வீரர்கள் அதிரடி காட்டினால் பஞ்சாப் அணி இமாலய ஸ்கோரை எட்டும். கிளன் மேக்ஸ்வேல் பார்மிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவுலிங்கை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் நன்றாக பந்துவீசி வரும் நிலையில், மற்ற பவுலர்கள் யாஷ் தாகூர், யான்சென், பெர்குசன் ஆகியோர் ரன்களை வாரி வழங்குகின்றனர். இது பஞ்சாப் அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஹைதராபாத் அணியை பொறுத்தவரை கடந்த சீசன் வரை அசுரபல பேட்ஸ்மேன்களுடன் அதிரடியாக ஆடி வந்த நிலையில், இம்முறை 300 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மென்கள் பார்மில் இல்லாததால் தோல்வியடைந்து வருகின்றனர். டிராவிஸ் ஹெட், கிளாசென், அபிஷேக் சர்மா, இஷன் கிஷன் ஆகியோர் பார்மிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் சிக்கனமாக பந்துவீசும் அணி என பெயர் பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தற்போது பவுலிங் படை பலவீனமாக காட்சியளிக்கிறது. இளம் படையின் அசத்தலான பஞ்சாப் அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சமாளிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச அணி: பிரியான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஸ்டொய்னிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல், சஷாங்க் சிங், யான்சென்
இதையும் படிங்க: குஜராத் டைட்டன்ஸ் அதிரடி வெற்றி தொடருமா; லக்னோ அணியுடன் இன்று மோதல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், இஷன் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெத் வர்மா, முகமது ஷமி, கமிண்டு மெண்டீஸ், சிமர்ஜித் சிங், சீசன் அன்சாரி, அபினவ் மனோகர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்