ETV Bharat / sports

Southern Railway Recuritment 2024: தெற்கு ரயில்வேயில் வேலை.. 10ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும்! - Southern Railway sports quota job

10 ஆம் வகுப்பு வரை படித்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 11, 2024, 9:31 AM IST

Etv Bharat
Representational image (Credits: Railway Recruitment cell)

ஐதராபாத்: தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு குழு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 67 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இந்த பணிகள் அனைத்தும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதி ஆண்டுக்கான குருப் A, B மற்றும் C பிரிவுகளில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பணியிடங்கள் நிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 67 காலிப் பணியிடங்கள் உள்ளம் நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

RecruiterRailway Recruitment Cell, Southern Railway
Post NameLevel- 1, 2, 3, 4, 5 (Various Posts)
Total Vacancies67 Posts
Application Starts7 September 2024
Last Date to Apply6 October 2024
Result DateTo be announced soon
Official websitewww.rrcmas.in

கல்வித் தகுதி:

பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 10 ஆம் வகுப்பு முதல் அதிகபட்சமாக பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, லெவல் 4 மற்றும் 5 பிரிவுகளில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். அவர்களுக்கு மொத்தம் 5 காலிப் பணியிடங்கள் உள்ளன.

அதேபோல் லெவல் 3 மற்றும் 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 12 அல்லது அதற்கு இணையான ஐடிஐ பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும். அவர்களுக்கு மொத்தம் 16 காலிப் பணியிடங்கள் உள்ளன. கடைசியாக லெவன் 1 பணியில் அதிகபட்சமாக 46 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் அதற்கு 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான ஐடிஐ பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களான EWS மற்றும் பொதுப் பிரிவினர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது அடிப்படையில் தகுதியானவர்கள் ஜனவரி 1, 2025 முதல் தீர்மானிக்கப்படுவார்கள். மற்ற பிரிவினர்களுக்கு வயது வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளின் படி தளர்வுகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

பொது, ஓபிசி, மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய (EWS) பிரிவினர்களுக்கு 500 ரூபாய் விண்ணப் கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணமாக 250 ரூபாய் செலுத்தினால் போதுமானதாகும்.

முக்கியமான நாட்கள்:

வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான தேதி: செப்டம்பர் 7, 2024

விண்ணப்பப் பதிவு தொடக்க நாள்: 7 செப்டம்பர் 2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 6 அக்டோபர் 2024

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

தெற்கு ரயில்வே விளையாட்டு கோட்டா பிரிவில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு எழுத்துத் தேர்வை காட்டிலும், உடல்மொழித் தேர்வுகள் தான் இருக்கும். அதன்படி 4 கட்டங்களாக வீரர், வீராங்கனைகள் மேற்கண்ட பதவிகளுக்கு தேர்வு செய்யபட உள்ளனர்.

  1. விளையாட்டு சோதனை தேர்வு,
  2. உடல் தகுதி தேர்வு,
  3. சான்றிதழ் சரிபார்ப்பு பணி,
  4. கடைசியாக மருத்துவ பரிசோதனை.

இந்த நான்கு படநிலைகளை தாண்டிய வீரர், வீராங்கனைகளுக்கு ஏறத்தாழ தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது:

  • தெற்கு ரயில்வேயின் ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு PDF இல் விவரிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் உங்கள் தகுதியை உறுதிப்படுத்தவும்,
  • கீழேயுள்ள “Apply Online” என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது நேரடியாக rrcmas.in என்ற இணையதளத்திற்கு சென்று எம்பிளாய்மென்ட் போர்ட்டலை அணுகவும்.
  • தேவையான தகவலுடன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய தொடரவும்.
  • குறிப்பிட்டபடி தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • பொருந்தக்கூடிய விண்ணப்பக் கட்டணங்களுக்கான கட்டணத்தைச் செயல்படுத்தவும்.
  • கடைசியாக, உங்கள் பதிவுகளுக்காக நீங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தின் நகலை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு தயாராகவும்.

Direct Links:

RRC SR Notification: Download Here

Application Link: Apply Here

Official website: Visit Here

இதையும் படிங்க: பாராலிம்பிக்சில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு! யாராருக்கு எவ்வளவு? - Paralympics Cash Prize

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.