ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றிப் பெற் 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.
வார இறுதி நாளான இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியும், தொடரின் 28 -வது லீக் ஆட்டமும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணிக்கு இடையே நடைபெற்று வருகிறது.
ஜெய்ப்பூரில் உள்ள சுவராஜ் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.
கேப்டன் ரியான் பராக் 30 ரன்களும். துருவ் ஜுரல 35 ரன்களும் எடுத்தனர். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது களமிறங்கியுள்ளது.
இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ள மற்றொரு ஆட்டத்தில் பலம்வாய்ந்த டெல்லி அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது.