ETV Bharat / sports

பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா? பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்! - RCB VS PBKS

இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் 34வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி, படிக்கல்
விராட் கோலி, படிக்கல் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 18, 2025 at 10:08 AM IST

2 Min Read

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது முதல் பாதி போட்டிகள் முடியும் தருவாயில் உள்ளது. அனைத்து அணிகளும் கிட்டதட்ட 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இன்று பெங்களூருவில் நடைபெறும் 34வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 4 வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு இதுவரை வெற்றி, தோல்வி என மாறிமாறி இருந்து வருகிறது. பெங்களூரு அணியை பொறுத்தவரை பவுலிங்கை விட பேட்டிங் வலுவாக உள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பிலிப் சால்ட், விராட் கோலி நல்ல பார்மில் உள்ளனர். தேவ்தட் படிக்கல், கேப்டன் ரஜத் பட்டிதார் ஆகியோர் இன்று அதிரடி விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட ஓவர்களில் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் ஆகியோர் அதிரடி காட்டும் பட்சத்தில் இமாலய ஸ்கோரை எட்டலாம்.

பவுலிங்கில் பெங்களூரு அணி பலவீனமாக உள்ளது. ஜோஷ் ஹேசல்வுட், யாஷ் தயால் ஆகியோர் அதிக ரன்களை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். சுழலில் குருணால் பாண்டியா பஞ்சாப் ரன் வேட்டையை கட்டுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் அசாத்திய வெற்றியை பெற்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. பஞ்சாப் அணியின் சஹால் பார்மிற்கு திரும்பியுள்ளதால் இன்றும் சுழலில் பெங்களூரு பேட்ஸ்மென்களுக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அர்ஷ்தீப் சிங், யான்சென் ஆகியோர் அபாரமாக பந்துவீசி வருகின்றனர். பேட்டிங்கை பொறுத்தவரை இளம் பட்டாளம் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், வதேரா ஆகியோர் அதிரடியாக ஆடும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு சவாலாக அமையும். மிடில் ஆர்டரில் மேக்ஸ்வேல், சஷாங்க் சிங் நன்றாக விளையாடும் பட்சத்தில் பஞ்சாப் எளிதாக வெற்றி பெறும் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் தங்க நகைகள், பரிசுப் பொருட்கள் மூலம் சூதாட்டம்? பிசிசிஐ எச்சரிக்கை!

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷெட்ஜே, சஷாங்க் சிங், மார்கோ யான்சென், சேவியர் பார்லெட், அர்ஷ்தீப் சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரஜத் பட்டிதார் (கேப்டன்), பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தட் படிக்கல், லியம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசல்வுட், சுயாஸ் சர்மா, யாஷ் தயால்

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.