ETV Bharat / sports

பலம் வாய்ந்த டெல்லியை சமாளிக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு; சொந்த மண்ணில் இன்று பலப்பரீட்சை! - RCB VS DC

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் 24வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 10, 2025 at 12:09 PM IST

2 Min Read

பெங்களூரு: இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பெங்களூரு, டெல்லி அணிகள் 31 முறை மோதியுள்ளன. இதில் பெங்களூரு 19 போட்டிகளிலும், டெல்லி 11 போட்டிகளிலும் வென்றுள்ளது.

ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி கடந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. அதேபோல் டெல்லி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசுரபலத்துடன் காட்சியளிக்கிறது. பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசையில் அனைவரும் நல்ல பார்மில் உள்ளது பலமாக உள்ளது. விராட் கோலி, சால்ட் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். மேலும் படிக்கல் தன் பங்கிற்கு அதிக ரன்களை குவித்து வருகிறார்.

கடைசி போட்டியில் மும்பை பந்துவீச்சை விளாசிய பட்டிதார் இன்றும் அதிரடியாக ஆடும் பட்சத்தில் இமாலய ஸ்கோரை எட்டலாம். பெங்களூரு அணியின் பந்துவீச்சும் பலமாக உள்ளது. புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் ஆகியோர் இன்று டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் நல்ல பார்மில் உள்ள நிலையில், பிரேசர் மெக்கர்க் இதுவரை பெரிய அளவில் ரன்கள் அடிக்காதது ஏமாற்றமாக உள்ளது.

அபிஷேக் சர்மா பெரிய இன்னிங்ஸ் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மிடில் ஆர்டரில் கேப்டன் அக்சர் படேல், அஷுதோஷ் சர்மா, ஸ்டப்ஸ் ஆகியோர் அதிக ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் டெல்லி அணி இமாலய ஸ்கோரை எட்டும். பவுலிங்கை பொறுத்தவரை டெல்லி பவுலர்கள் அவ்வப்போது விக்கெட் எடுத்தாலும் அதிக ரன்களை வாரி வழங்குகின்றனர்.

ஸ்டார்க், முகேஷ்குமார் ஆகியோர் அதிக ரன்களை கொடுக்கின்றனர். இது டெல்லி அணிக்கு பின்னடைவாக உள்ளது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ள இரு பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விக்னேஷ் புதூர் முதல் பிரியான்ஸ் ஆர்யா வரை: ஐபிஎல் 2025 தொடரில் சாதிக்கும் இளம் வீரர்கள்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச அணி: ரஜத் பட்டிதார் (கேப்டன்), பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தட் படிக்கல், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா,டிம் டேவிட், க்ரூணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசல்வுட், யாஷ் தயால்

டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல் (கேப்டன்), கே.எல்.ராகுல், பிரேசர் மெக்கர்க், அபிஷேக் பொரேல், சமீர் ரிஸ்வி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.