சென்னை: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் சென்னை அணிக்கு இது இரண்டாவது போட்டியாகும். முதல் போட்டியில் மும்பை அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பெங்களூருக்கு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் தொடக்க வீரராக பில் சால்ட்டும், நட்சத்திர வீரர் விராட் கோலியும் களமிறங்கினர். சென்னை அணியின் முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். தொடக்க ஓவரில் பில் சால்ட் இரண்டு பவுண்டர்களுடன் ஒன்பது ரன்களை அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
தொடக்க வீரர்கள் சாட்டும் விராட் கோலியும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டி அணியின் கோரை உயர்த்தி வந்திருந்தனர். இந்நிலையில் 5வது ஓவரை நூர் அகமது வீசினார். 5வது ஓவரின் கடைசி பந்தை சந்தித்த சால்ட் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் தனது விக்கெட்டை பறி கொடுத்து 16 பந்துகளில் 32 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.
தேவ்தத் படிக்கல் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கி விராட் கோலி உடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தேவ்தத் படிக்கல் சென்னை அணியின் பந்துவீச்சை பவுன்டரிக்கு அடித்து ஆடிக் கொண்டிருந்தார். அஸ்வின் வீசிய 8வது ஓவரில் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்திருந்த தேவதத் படிக்கல் பெவிலியன் திரும்பினார்.
4வது விக்கெட்டிற்கு களம் இறங்கிய அணியின் கேப்டன் ராஜத் படிதார் விராட் கோலி உடன் இணைந்து இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் நட்சத்திர வீரர் விராட் கோலி 31 பந்துகளில் 30 ரன் எடுத்திருந்த நிலையில் நூர் அகமது வீசிய 13 வது ஓவரில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக களம் இறங்கிய லிவிங்ஸ்டன் நூர் அகமது வீசிய 16 அது ஓவரில் 9 பந்துகளில் 10 எடுத்த நிலையில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய ஜித்தேஷ் ஷர்மா 6 பந்துகளில் 12 ரன் எடுத்திருந்த நிலையில் கலீல் அகமது வீசிய 18 வது ஓவரில் ரவீந்திர ஜடேஜாவிடும் கேட்ச் கொடுத்து அவரும் வெளியேறினார்.
Innings Break ‼
— IndianPremierLeague (@IPL) March 28, 2025
Solid show with the bat by @RCBTweets 👏👏
They put up a target 🎯 of 1️⃣9️⃣7️⃣ for #CSK
Which way is this one going? 🤔
Scorecard ▶ https://t.co/I7maHMwxDS #TATAIPL | #CSKvRCB pic.twitter.com/ZUtXTDeSDi
இதற்கு இடையே நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் படிதார் இந்த தொடரின் தனது முதல் 50 ரன்னை பதிவு செய்தார். சிறப்பாக சிறப்பாக விளையாடி வந்த அவர், 32 பந்துகளில் 51 ரன் எடுத்திருந்த நிலையில் மதீஷா பத்திரனா வீசிய 19வது ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய க்ருணால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
9 வது விக்கெட்டிற்கு களமிறங்கிய புவனேஷ் குமார் டிம் டேவிட்டுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தனர். இதில் டிம் டேவிட் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி வரை களத்தில் இருந்த டிம் டேவிட் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன் எடுத்து சென்னை அணிக்கு 197 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது.
சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், பத்திரனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.