ETV Bharat / sports

ஐபிஎல் 2025: பலம் வாய்ந்த டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்? - RR VS DC

ஐபிஎல் தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 16, 2025 at 9:53 AM IST

2 Min Read

டெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 18வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று டெல்லியில் நடைபெறும் 32வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில், 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. டெல்லி பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்கர்க் பார்மில் இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற வீரர்கள் அபிஷேக் பொரேல், அக்சர் படேல், கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளதால் டெல்லி அணியால் 200 ரன்களை எளிதாக கடக்க முடிகிறது.

கடந்த போட்டியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி திருப்புமுனை ஏற்படுத்திய கருண் நாயர், இன்றும் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி கட்ட ஒவர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷூதோஷ் சர்மா அதிரடியாக விளையாடினால் ராஜஸ்தான் பவுலர்கள் நிலை திண்டாட்டம் தான். பவுலிங்கில் ஸ்டார்க் விக்கெட்கள் எடுத்தாலும், ரன்கள் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணி இந்த தொடர் ஆரம்பம் முதல் நிலை இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங்கில் ஆரம்பத்தில் ரன்கள் சேர்த்தாலும், கடைசி கட்ட ஓவர்களில் ரன்கள் சேர்க்க தவறுகின்றனர். கேப்டன் சஞ்சு சாம்சன் ரன்கள் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஜெய்ஸ்வால், பட்லர் நல்ல பார்மில் உள்ளனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கும் ரியான் பராக், துருவ் ஜுரேல் வேகமாக ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் இமாலய ஸ்கோரை எட்டலாம்.

பவுலிங்கில் ராஜஸ்தான் அணி பலவீனமாக உள்ளது. ஜோப்ரா ஆர்ச்சர் விக்கெட் வீழ்த்தினாலும் அதிக ரன்களை வழங்குகிறார். சந்தீப் சர்மா, ஹசரங்கா கட்டுக்கோப்பாக பந்துவீசும் பட்சத்தில் டெல்லி பேட்ஸ்மென்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். இரு அணிகளும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விறுவிறுப்பான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி; ஐபிஎல் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பட்டியல்!

டெல்லி கேபிடல்ஸ் உத்தேச அணி: பிரேசர் மெக்கர்க், அபிஷேக் பொரேல், கருண் நாயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாம்சன், ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மயர், நிதிஷ் ராணா, ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்‌ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, குமார் கார்த்திகேயா

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.