புதுடெல்லி: டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கிய 62ஆவது போட்டியில் ராஜஸ்தான்-சென்னை அணிகள் மோதின. டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்தது.
இதையடுத்து சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஆயுஷ் மத்ரே ஒரு சிக்ஸ்ர், 8 ஃபோர்கள் என அசத்தி 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணிக்கு ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார்.
2ஆவதாக களம் இறங்கிய கான்வே 10 ரன்களிலும், அடுத்து வந்த உர்வில் படேல் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 4ஆவதாக களம் இறங்கிய அஸ்வின் 8 பந்துகளில் வெறும் 13 ரன்களை மட்டுமே எடுத்து ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார். 5 ஆவதாக விளையாடிய ஜடேஜா வெறும ஒரு ரன் எடுத்து யுத்வீர் சிங் பந்தில் அவுட் ஆகி வந்த வேகத்தில் திரும்பினார். 6ஆவதாக களம் இறங்கிய டெவால்ட் பிரெவிஸ் 42 ரன்களும், 7ஆவதாக ஆட வந்த சிவம் துபே 39 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினர்.
அணியின் கேப்டன் தோனி வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆகாஷ் மத்வால் பந்தில் அவுட் ஆனார். 9ஆவதாக வந்த அன்ஷுல் காம்போஜ் 5ரன்களும், நூர் அகமது 2 ரன்களும் எடுத்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்களை இழந்து 187 ரன்கள் எடுத்திருந்தது.
இதையும் படிங்க: 2025 ஐபிஎல் சீசன்: லக்னோவை வீழ்த்திய ஹைதராபாத் அணி
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 36 ரன்களை எடுத்து அன்ஷுல் காம்போஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 4 சிக்ஸர், 4 ஃபோர்கள் என 33 பந்துகளில் 57 ரன்கள் குவித்த நிலையில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார்.
மூன்றாவதாக விளையாட வந்த சஞ்சு சாம்ஸன் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அஸ்விந்த் பந்தில் ஆட்டமிழந்தார். 4ஆவதாக விளையாடிய ரியான் பராக் வெறும் 3 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். 5ஆவதாக ஆட வந்த துருவ் ஜூரெல் 31 ரன்களும், ஷிம்ரான் ஹெட்மியர் 12 ரன்களும் எடுத்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாகவே 17.1 ஓவரில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 188 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.