அகமதாபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாதில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் கோப்பை வெல்லாத நிலையில், முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடரில் புதிய அணி சாம்பியன் அணி கோப்பையை கைப்பற்ற உள்ளது.
ஆர்சிபி அணி முதல் குவாலிபயர் போட்டியில் வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், பஞ்சாப் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பையை வீழ்த்தி பைனல் போட்டியில் நுழைந்தது. பஞ்சாப் அணி 9 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
The Starting XIs of @RCBTweets and @PunjabKingsIPL for the #Final are locked in 🔒💪
— IndianPremierLeague (@IPL) June 3, 2025
Pick your match-winner 👇
Updates ▶ https://t.co/U5zvVhcvdo#TATAIPL | #RCBvPBKS | #TheLastMile pic.twitter.com/6rU2R6Gqsn
இதையும் படிங்க: 18 வருட காத்திருப்பு... ஐபிஎல் 2025 கோப்பையை கைப்பற்றப் போவது யார்? இன்று பெங்களூரு - பஞ்சாப் இறுதி யுத்தம்!
விறுவிறுப்பான இறுதி போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் நட்சத்திர கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இரு அணிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் இறுதி போட்டியை எதிர்பார்த்து உள்ளனர்.