ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 66 ஆவது போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் விளையாடின.
முன்னதாக டாஸ்வென்ற டெல்லி அணி பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங்கில் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஜோடியாக விளையாடிய பிரப்சிம்ரன் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் விப்ராஜ் நிகம் பந்தில் அவுட் ஆனார்.
மூன்றாவதாக களம் இறங்கிய ஜோஷ் இங்கிலிஸ், 12 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் விப்ராஜ் நிகம் பந்தில் ஆட்டமிழந்தார். 4ஆவதாக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் சற்றே நிதானமாக ஆடி 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆனார். 5ஆவதாக ஆட வந்த நேஹல் வதேரா, 16 ரன்களிலும், அவருக்கு அடுத்து ஆட வந்த ஷஷாங்க் சிங் 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையும் படிங்க: 20 ஓவர்கள் பந்துவீச அதிக நேரம்: ரஜத் பட்டிதார், பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு அபராதம்!
7ஆவது வீரராக களம் இறங்கிய ஸ்டோய்னிஸ் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்ததாக ஆட வந்த அஸ்மதுல்லா ஒரு ரன்னுடனும், அவருக்கு அடுத்து களம் இறங்கிய மார்கோ ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 10 ஆவது வீரராக களம் இறங்கிய ஹர்பிரீத் பிரார் 7 ரன்கள் எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை பஞ்சாப் அணி எடுத்திருந்தது.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களத்தில் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ ஜான்சன் பந்தில் அவுட் ஆனார். அவருடன் இணை சேர்ந்து ஆட வந்த ஃபாஃப் டு பிளெசிஸ் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆவதாக களம் இறங்கிய கருண் நாயர் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பிரீத் பிரார் பந்தில் அவுட் ஆனார். 4 ஆவதாக விளையாடிய செடிகுல்லா அடல் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார். 5 ஆவதாக களம் இறங்கிய சமீர் ரிஸ்வி நிதானமாக ஆடி 25 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார்.
6ஆவதாக களம் இறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாகவே 19.3 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 208 ரன்களை டெல்லி அணி எடுத்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்