ETV Bharat / sports

விறுவிறுப்பான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி; ஐபிஎல் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பட்டியல்! - PBKS VS KKR

கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் 16 ரன்களில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், ஐபிஎல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 16, 2025 at 7:44 AM IST

2 Min Read

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி ’த்ரில்’ வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 18வது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபாரமான தொடக்கம் வழங்கினர்.

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினர். இந்நிலையில் பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்கள் இருந்த போது ஹர்ஷித் ராணா பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரமன்தீப் சிங்கின் அபாரமான கேட்சில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய ஜாஷ் இங்கிலிஸ் (2), நேஹல் வதேரா (10) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் மடமடவென சரிந்தது.

ஒரு பக்கம் சற்று நம்பிக்கை அளித்த பிரப்சிம்ரன் 30 ரன்களுக்கு அவுட்டாக பஞ்சாப் அணியின் நம்பிக்கை தகர்ந்தது. வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் பஞ்சாப் அணியினர் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இறுதியாக 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி காக் (2), சுனில் நரைன்(5) என தொடக்க ஆட்டக்காரர்கள் அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் ரஹானே, ரகுவன்ஷி ஜோடி சற்று ரன்கள் சேர்த்த நிலையில், சஹால் பந்துவீச வந்தார். சஹால் அபாரமான பந்துவீச்சில் ஆட்டம் தலைகீழாக மாறியது. ரஹானே (17), ரகுவன்ஷி (37), என தொடர்ந்து அவுட்டானதால் கொல்கத்தா அணி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டது.

அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாக 79 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து திணறியது. அப்போது ரஸஸ், சஹால் பந்தில் இரண்டு சிக்சர்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். பின்னர் வைபவ் அரோரா டக் அவுட்டாக கொல்கத்தா ரஸலை நம்பி இருந்தது. இந்த நேரத்தில் ரஸல், யான்சென் பந்தில் அவுட்டாக கொல்கத்தா 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி 16 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களை எடுத்து வெற்றி பெற்று பஞ்சாப் அணி சாதனை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2009 சீசனில் முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.

நேற்று 95 ரன்களில் சுருண்டதன் மூலம் கொல்கத்தா அணி குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான மொத்த ரன்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இந்த வரிசையில் மும்பைக்கு எதிராக 2008இல் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ரன்களாக உள்ளது.

நேற்று அபாரமாக பந்துவீசிய பஞ்சாப் வீரர் சஹால், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். சஹால் இதுவரை 8 முறை 4 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த வரிசையில் சுனில் நரைன் 8 முறை 4 விக்கெட்களை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய நம்பிக்கை - யார் இந்த 20 வயது ஷேக் ரஷீத்?

நேற்று அர்ஷ்தீப் சிங் ரன்கள் வழங்காமல் ஒரு ஓவரில் விக்கெட் வீழ்த்தியது இந்த 2025 சீசனில் வீசப்பட்ட 5வது விக்கெட் மெய்டன் (maiden) ஓவராகும்.

சுனில் நரைன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சுனில் நரைன் பஞ்சாப் அணிக்கு எதிராக 26 போட்டிகளில் 36 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து உமேஷ் யாதவ் பஞ்சாப் அணிக்கு எதிராக 22 போட்டிகளில் 35 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.