ETV Bharat / sports

ஐபிஎல் 2025: பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை சமாளிக்குமா கொல்கத்தா? - PBKS VS KKR

ஐபிஎல் தொடரில் இன்று சண்டிகரில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 15, 2025 at 10:40 AM IST

2 Min Read

சண்டிகர்: ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 18வது ஐபிஎல் தொடர் இந்தியா முழுவதும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெறும் 31வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமனதாக பார்க்கப்படுகிறது.

சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்று நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி புத்துயிர் பெற்றுள்ளது. கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் பலமாக உள்ளது. கேப்டன் அஜின்கியா ரஹானே, கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு அடித்தளம் அமைக்கிறார். இதனைத்தொடர்ந்து களமிறங்கும் வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

கொல்கத்தா அணியின் பேட்டிங் அளவிற்கு பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வருண் சக்கரவர்த்தி எதிரணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தி நம்பிக்கை அளிக்கிறார். மேலும் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். பஞ்சாப் அணி ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் 245 ரன்கள் எடுத்தும், மோசமான பந்துவீச்சல் படுதோல்வி அடைந்தது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு கொல்கத்தா சாம்பியன் அணிக்கு கேப்டனாக இருந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர், அவர் கொல்கத்தா அணியால் தக்க வைக்கப்படாத நிலையில், இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக களமிறங்குகிறார். இந்த சீசனில் ஆரம்பம் முதல் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. பிரியான்ஷ் ஆர்யா, பிரம்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், வதேரா, சஷாங்க் சிங் என இன்னிங்ஸின் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்குகின்றனர்.

மேக்ஸ்வெல்லும் இன்று அதிரடி காட்டும் பட்சத்தில் இமாலய ஸ்கோரை எட்டலாம். ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் இதுவரை 33 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 21 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 12 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வென்றுள்ளது. இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய நம்பிக்கை - யார் இந்த 20 வயது ஷேக் ரஷீத்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச அணி: டி காக், ரஹானே (கேப்டன்), சுனில் நரைன், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், மொயின் அலி, ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச அணி: பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, சஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ், மார்கோ யான்சென், சஹால், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யாஷ் தாகூர்

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.