சென்னை: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் 4 வெளிநாட்டு வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளது மேலும் வலுப்பெறச் செய்துள்ளது. 18வது ஐபிஎல் தொடர் இரண்டாம் கட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டது. கடைசியாக கடந்த மே 8ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிறுத்தம் தொடர்பான உடன்பாடு ஏற்பட்டதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் வரும் மே 17ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மீதமுள்ள போட்டிகள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, அகமதாபாத், மும்பை ஆகிய 6 மைதானங்களில் நடைபெறுகிறது. இதனிடையே ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் போட்டிகள் தொடங்கவுள்ளதால் தங்கள் அணியுடன் இணைந்து வருகின்றனர்.
குறிப்பாக பெங்களூரு அணியில் ஹேசல்வுட் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் அணிக்கு திரும்புவார்களா என சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஃபில் சால்ட், ஜேக்கப் பெத்தல், லியம் லிவிங்ஸ்டன், லுங்கி நிகிடி ஆகியோர் பெங்களூரு அணியில் இணைந்துள்ளனர். பெத்தல் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட உள்ளதால் ஐபிஎல் தொடரில் அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் மட்டும் ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என தெரிகிறது.
𝐌𝐚𝐤𝐞 𝐬𝐨𝐦𝐞 𝐧𝐨𝐢𝐬𝐞 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐥𝐚𝐝𝐬 𝐜𝐨𝐳 𝐭𝐡𝐞𝐲’𝐫𝐞 𝐛𝐚𝐜𝐤! 🔥
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 15, 2025
After those jaw-dropping teasers, it’s time for the full blockbuster show! 👊#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/Tsnj7DIgYT
அதே நேரத்தில் ஃபில் சால்ட், டிம் டேவிட், துஷாரா, லியம் லிவிங்ஸ்டன் மீதமுள்ள முழு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹேசில்வுட் மீண்டும் அணிக்கு திரும்புவாரா என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: மீண்டும் களைகட்டப் போகும் கிரிக்கெட் மைதானம்: இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அட்டவணை!
பெங்களூரு அணி இந்த ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் பலமான அணியாக காட்சியளிக்கிறது. ஆர்சிபி அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் அணிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வந்தனர். பில் சால்ட் 9 இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்த நிலையில், ஹேசல்வுட் 10 போட்டிகளில் 18 விக்கெட்கள் எடுத்து இந்த தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த பவுலர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.