Bihar Election Results 2025

ETV Bharat / sports

ஆஷஸ் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் - பாட் கம்மின்ஸ் ஓபன் டாக்!

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 13, 2025 at 2:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று அந்த அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

அதன் பின், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக டிசம்பர் 4ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. மூன்றாவது போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டிலும், நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னிலும், கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4 ஆம் தேதி சிட்னியிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

ஏனெனில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பாட் கம்மின்ஸ், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய இருந்தார். மேலும் அவர் எதிர்வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கமாட்டார் என்ற செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான், பெர்த்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டிக்கு முன் முழு உடற்தகுதியை எட்டுவது கடினம் தான் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய கம்மின்ஸ், "ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். இருப்பினும் எனக்கு இன்னும் தயாராவதற்கு அவகாசம் உள்ளது. அதனால் நான் எனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். மேலும் நான் எனது ஓட்டப்பயிற்சியை செய்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது ஓட்டத்தின் இலக்கை நான் அதிகரித்து கொண்டு வருகிறேன். இதன் காரணமாக அடுத்த வாரம் நான் எனது பந்துவீச்சு பயிற்சியை தொடங்க இருக்கிறேன்" என்றார்.

பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முன் பாட் கம்மின்ஸ் முழு உடற்தகுதியையும் எட்டும் பட்சத்தில் அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் உத்வேகத்தை அளிக்கும். ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான பாட் கம்மின்ஸ், 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் பந்துவீச்சில் 309 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 3 அரைசதங்களுடன் 1548 ரன்களையும் எடுத்துள்ளார். இதனால் எதிவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பாட் கம்மின்ஸ் இடம் பெறுவது அந்த அணிக்கு பெரும் பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க:

  1. வரலாற்று சாதனைகளை படைத்த அலிசா ஹீலி, ஸ்மிருதி மந்தனா!
  2. இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்கு, மார்க் வுட்