Bihar Election Results 2025

ETV Bharat / sports

நியூசிலாந்துக்கு டஃப் கொடுக்குமா வங்கதேசம்? வெற்றி யாருக்கு?

ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், நியூசிலாந்து அணி 2 முறையும், வங்கதேச அணி ஒரு முறை கூட வெற்றி பெறாமலும் உள்ளன.

நியூசிலாந்துக்கு டஃப் கொடுக்குமா வங்கதேசம்?
நியூசிலாந்துக்கு டஃப் கொடுக்குமா வங்கதேசம்? (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : October 9, 2025 at 5:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து-வங்கதேச மகளிர் அணிகள் கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது

இதில் வங்கதேச அணியானது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்துடன் கடினமாக போராடி தோல்வியையும் சந்தித்த கையோடு இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து மகளிர் அணி இந்த தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து, முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

வங்கதேச மகளிர் அணி

நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கிய நிலையில், இரண்டாவது போட்டியிலும் கடுமையான போராட்டத்திற்கு பின்னரே தோல்வியைத் தழுய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கில் அறிமுக வீராங்கனை ருபியா ஹைதர், நிகர் சுல்தானா, சோபனா மோஸ்ட்ரி, ஷர்மிம் அக்தர், ஷொர்னா அக்தர் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் திறனைக் கொண்டுள்ளனர். பவுலிங்கில் ஷொர்னா அக்தர், மருஃபா அக்தர், நஹித் அக்தர் உள்ளிட்டோர் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து மகளிர் அணி

சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து மகளிர் அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி முதல் வெற்றிக்கான தேடலுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கில் சோஃபி டெவின், சுசி பேட்ஸ், ப்ரூக் ஹாலிடே, அமெலி கெர், ஜெஸ் கெர், ஜார்ஜியா பிளிம்மர் உள்ளிட்டோரும், பவுலிங்கில் லியா தஹுஹு, இசபெல் கேஸ். மேடி க்ரீன், ரோஸ்மேரி மெய்ர், ஈடன் கார்சன், ஃப்ளோரா டெவான்ஷயர் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர் பலப்பரீட்சை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 2 முறையும், வங்கதேச அணி ஒரு முறை கூட வெற்றி பெறாத நிலையில், இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

பர்சபாரா கிரிக்கெட் மைதானம்

பர்சபாரா கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 6 ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி இரண்டு முறையும், சேஸிங் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை தகவல்கள்

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் ஜியோ-ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியைக் காண முடியும். இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு 2.30 மணிக்கு நடைபெறும்.

இதையும் படிங்க:

  1. ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரஷித் கான்!
  2. பெத் மூனி, அலனா கிங் அதிரடியில் மீண்டெழுந்த ஆஸி; பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

உத்தேச லெவன்

நியூசிலாந்து அணி: சூசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், லியா தஹுஹு, ஈடன் கார்சன், பிரீ இல்லிங்

வங்கதேச அணி: ருப்யா ஹைதர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா (கேட்ச்), சோபானா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்தர், ஃபஹிமா கதுன், நஹிதா அக்தர், ரபேயா கான், மருஃபா அக்தர், ஷஞ்சிதா அக்தர் மேகலா