ETV Bharat / sports

"நீரஜ் சோப்ராவுடனான எனது தொடர்பு.."- முதல் முறையாக மனம் திறந்த மனு பாக்கர்! - Manu Bhaker On Neeraj Chopra

பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு பின் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இடையே காதல் மலர்ந்ததாக தகவல்கள் பரவின. மனு பாக்கர் மற்றும் குடும்பத்தினருடன் நீரஜ் சோப்ரா இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில், அது குறித்து மனு பாக்கர் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 10, 2024, 1:22 PM IST

Etv Bharat
Manu Bhaker - Neeraj Chopra (ANI)

ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மனு பாக்கர். சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்ற வீராங்கனை, ஒரு நளுக்குள் இரண்டு பதக்கம் வென்றவர் என்ற பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார் மனு பாக்கர்.

அதேநேரம் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுடன் காதலில் விழுந்ததாக மனு பாக்கர் குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மனு பாக்கர் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற பின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை எதிர்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மனு பாக்கர், ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீராங்கனையாக அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்றது புதிய வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளுக்கான அலையாக பார்க்கிறேன்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை தவறவிட்ட நிலையில், தற்போது இரண்டு பதக்கங்களை வென்று இருப்பது எனக்கான அங்கீகாரம் மற்றும் மதிப்பை பெற்றுக் கொடுத்ததாக உணர்கிறேன். அன்பு மற்றும் ஆதரவால் உணர்வசத்திற்குள்ளான எனக்கு ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக் கொடியை சுமந்து செல்லும் வாய்ப்பை வழங்கியது உத்வேகத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் ஓய்வில் உள்ள நீங்கள் இயல்பு வாழ்க்கையில் என்னென்ன பணிகள் மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பெரும்பாலும் பயிற்சி, காயங்களில் இருந்து மீண்டு வருதல், தனிப்பட்ட காரணங்களுக்காக நேரம் செலவிடுதல் என நாட்களை கழிந்து வருகின்றன.

காலையில் யோகாவுடன் தொடங்கும் எனது நாள், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி உள்ளிட்ட எனது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள போதிய நேரத்தை செலவிடுவதன் மூலம் கடந்து செல்கிறது. பயிற்சிக்கு பின்னர் எனது உடல் ஆரோக்கியத்தை பேணக் கூடிய வகையில் பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவேன். மாலை நேரங்களில் ஓவியம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது என்று நாட்கள் கழிகின்றன என்றார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் அதிக செல்வாக்கு மிக்க நபர்களை சந்தித்து இருக்கும் நிலையில், அதில் சிறந்தவர் யார் என்ன காரணம் என்ற கேள்விக்கு, ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் நான் சந்தித்தவர்களின் மிக முக்கியமானவர் நீரஜ் சோப்ரா, பல்வேறு சாதனைகளை புரிந்து பலருக்கு ஊக்கமளிக்கும் நபராக அவர் இருந்து வருகிறார்.

எங்களுக்கு இடையேயான உரையாடல் போட்டிகளில் எவ்வாறு அழுத்தங்களை எதிர்கொண்டு விளையாடுவது, மன தைரியத்தை கட்டுக் கோப்புடன் வைத்துக் கொள்வதன் அவசியம் என்ன என்பது குறித்தே பெரும்பாலும் இருக்கும். இருவரும் இது போன்ற கருத்துகளை தொடர்ந்து பரிமாறி வருகிறோம் என்று கூறினார்.

விளையாட்டு வீராங்கனையாக இருக்காவிட்டால் என்னவாகி இருப்பீர்கள் என்ற கேள்விக்கு, ஆசிரியராகி இருப்பேன் என்று ஒற்றை வார்த்தையில் நச்சென்று பதிலளித்தார் மனு பாக்கர். மேலும் தனக்கு பிடித்த விளையாட்டு பிரபலம் மற்றும் ரோல் மாடல் பிவி சிந்து என்று மனு பாக்கர் கூறினார்.

இதையும் படிங்க: புற்றுநோயை வென்ற விளையாட்டு பிரபலங்கள்! யுவராஜ் சிங்கை தாண்டி நீளும் பட்டியல்! - SPORTS PERSONS FOUGHT WITH CANCER

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.