ETV Bharat / sports

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல் நியமனம்! - Morne Morkel

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க வீரர் மோர்னே மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 3:56 PM IST

Etv Bharat
Morne Morkel (IANS)

ஐதராபாத்: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு பயிற்சியாளர்களாக கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டதை பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கலின் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோர்னே மோர்கல் பயிற்சியின் கீழ் இந்திய அணி, செப்டம்பர் 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்காக 86 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மோர்னே மோர்க்கல் முறையே 309, 188 மற்றும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

33 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முழுக்கு போட்ட மோர்னே மோர்க்கல் தொடர்ந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். முன்னதாக 2023 நவம்பர் மாதம் வரை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் சோபிக்காத நிலையில், பயிற்சியாளர் பதவியை விட்டு மோர்னே மோர்க்கல் விலகினார்.

மோர்னே மோர்க்கலும், கவுதம் கம்பீருக்கும் இடையிலான உறவு நீண்ட நாட்களை கொண்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவரும் மூன்று சீசன்களில் விளையாடினார். தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் பணியாற்றிய போது அதே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல் பணியாற்றினார்.

பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கலுடன் சேர்த்து உதவி பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோர் இந்திய அணியை தொடர்ந்து வழிநடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே, இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பராஸ் மாம்ப்ரேக்கு பதிலாக மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இணைக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் பராஸ் மாம்ப்ரே சிறப்பாகப் பணியாற்றினார். இந்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய நிலையில் அத்துடன் அவர்களது ஒப்பந்தம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு! ரோகித் சர்மா தாறுமாறு அதிரடி! - ICC Rankings

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.