பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்த போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டர் ஒற்றையர் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று இருந்தார்.
🇮🇳💔 𝗜𝘁 𝗷𝘂𝘀𝘁 𝘄𝗮𝘀𝗻'𝘁 𝗺𝗲𝗮𝗻𝘁 𝘁𝗼 𝗯𝗲! Despite another strong performance from Manu Bhaker in the final, she unfortunately missed out on securing a third Olympic medal at #Paris2024.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 3, 2024
👏 Keep your chin up queen, you have already made India proud with your efforts!… pic.twitter.com/ImWJmwmKDb
தற்போது 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கம் வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டு நான்காவது இடத்தை பிடித்தார். அதேநேரம் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஒரே சீசனில் இரண்டு பதக்கங்களை வென்று தந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை மனு பாக்கர் பெற்று உள்ளார்.
Paris Olympics 2024 | India's Manu Bhaker finishes fourth in 25m pistol women's final. #OlympicGames
— ANI (@ANI) August 3, 2024
இதையும் படிங்க: சூப்பர் ஓவர் வரலாறு தெரியுமா? இந்தியா - பாகிஸ்தானால் உருவான சூப்பர் ஓவர்! - India vs Sri Lanka ODI Cricket