ETV Bharat / sports

ஜஸ்ட் மிஸ்.. வெறும் 5 ரன்களில் வெற்றியை கோட்டைவிட்ட கொல்கத்தா - லக்னோ த்ரில் வெற்றி! - LSG VS KKR MATCH RESULT

கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.

வெற்றிக் களிப்பில் லக்னோ அணி வீரர்கள்
வெற்றிக் களிப்பில் லக்னோ அணி வீரர்கள் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 8, 2025 at 8:25 PM IST

1 Min Read

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 21-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேட்பன் ரஹானே, தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி மார்க்ரம், மார்ஷ், பூரன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 238 ரன்கள் குவித்தது.

239 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிகாக் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுனில் நரேனும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் ஏறிக்கொண்டிருந்த ரன்ரேட், மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ச்சி என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் ரஹானே பொறுப்போடும், அதிரடியாகவும் ஆடி 35 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். வெங்கடேஷ் ஐயரும் தன் பங்கிற்கு 29 பந்துகளில் 45 ரன்களை சேர்த்தார். இதில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

இதையும் படிங்க: கொல்கத்தா பெளலிங்கை உரித்தெடுத்த மார்ஷ், பூரன்; 238 ரன்களை குவித்த லக்னோ!

ரஹானே மற்றும் ஐயரின் அதிரடியால் சரிவில் இருந்து மீண்ட கொல்கத்தா அணி வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரமன்தீப் சிங், ரகுவம்சி, ஆன்ட்ரூ ரசூல் என மிடில் ஆர்டர் பேஸ்ட்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறியதால் அந்த அணி மீண்டும் நெருக்கடிக்கு ஆளானது.

இறுதியில் ரிங்கு சிங் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 15 பந்துகளில் 38 ரன்களை குவித்து அணியை வெற்றிக்கு மிக அருகில் இட்டுச் சென்றார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்களை தான் எடுக்க முடிந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.

லக்னோ அணி தரப்பில் ஆகாஷ் தீப், சர்தூல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியை அடுத்து, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த லக்னோ அணி 6 புள்ளிகளுடன் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி இத்தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3-இல் வெற்றியும், 2-இல் தோல்வியும் அடைந்துள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.