கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு (KKR) 239 ரன்கள் எனும் இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (LSG).
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே தற்போது நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க ஆட்டக்கார்களான அய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் கொல்கத்தா அணி வீரர்களின் பந்துவீச்சை பாராபட்சமின்றி பதம் பார்த்தனர். 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உட்பட 48 பந்துகளில் 81 ரன்களை குவித்த மார்ஷ், ஆன்ட்ரூ ரசூல் பந்தில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Pooran vs Russell Calypso Battle 💪
— IndianPremierLeague (@IPL) April 8, 2025
🔽 Watch Nicholas going berserk 💥#TATAIPL | #KKRvLSG
இதையும் படிங்க: வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!
மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான மார்க்ரம் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 28 பந்துகளில் 47 ரன்களை குவிந்தார். இவ்விரு வீரர்களின் கோரத்தாண்டவம் போதாதென்று, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் தன் பங்கிற்கு கொல்கத்தா அணியின் பெளலிங்கை சின்னாபின்னமாக்கினார். 36 பந்துகளில் 87 ரன்களை குவித்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரின் ருத்ரதாண்டவத்தில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
Muscular Knock 💪
— IndianPremierLeague (@IPL) April 8, 2025
Marsh blazes his way to fantastic 81(48) 🔥
🔽 Watch | #TATAIPL | #KKRvLSG
ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 238 ரன்களை குவித்துள்ளது. 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி தற்போது களமிறங்கி ஆடி வருகிறது.
வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் உள்ளிட்ட கொல்கத்தா அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களின் பெளலிங் இன்று எடுபடவில்லை. ஹர்சித் ரானா மட்டும் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரும் 4 ஓவர்களில் 51 ரன்களை வாரி வழங்கினார்.
இன்றைய நிலவரப்படி, புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 5-ம் இடத்திலும், லக்னோ அணி 6 -வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.