ETV Bharat / sports

2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்: ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றி! - MUMBAI BEATS HYDERABAD

2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

மும்பை அணி வீரர்கள்
மும்பை அணி வீரர்கள் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 17, 2025 at 11:25 PM IST

2 Min Read

மும்பை: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி போட்டியில் அபார வெற்றி மூலம் மும்பை, ஹைதராபாத் அணிகள் அசுரபலத்துடன் காட்சியளிக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கிய போது இரு அணிகளும் தொடர் தோல்விகளை பெற்று வந்த நிலையில், கடைசி போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. தற்போது மும்பை, ஹைதராபாத் அணிகள் 6 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத் அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசை அசுரபலத்துடன் காட்சியளிக்கிறது.

ஐபிஎல் சீசனின் 33ஆவது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து கடந்த போட்டியில் 246 ரன்கள் சேஸ் செய்த அதே உற்சாகத்தில் இன்று ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்கார ராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா, 7 ஃபோர்கள் உட்பட 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்த்திக் பாண்டியா வீசிய பந்தில் அவுட் ஆனார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஹெட் 3 ஃபோர்கள் உட்பட 29 பந்துகளில் 28 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். மூன்றாவதாக களம் இறங்கிய இஷான் கிஷன் மூன்று பந்துகளில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் திரும்பினார். நான்காவதாக விளையாடிய நிதிஷ் ரெட்டி, 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஐந்தாவதாக ஆடிய கிளாசென் 3 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள் என 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார். ஆறாவதாக களம் இறங்கிய அனிகேத் வர்மா 18 ரன்கள் எடுத்திருந்தார். 7 ஆவதாக ஆடிய கம்மின்ஸ் 8 ரன்கள் மட்டும் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் குவித்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடத் தொடங்கியது. முதலில் ஆடிய ரியான் ரிக்கல்டன் 5 ஃபோர்கள் உட்பட 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷால் படேல் வீசிய பந்தில் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரியான் ரிக்கெல்டனுடன் ஜோடி சேர்ந்து ஆடிய ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் உட்பட 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3ஆவதாக ஆட வந்த வில் ஜாக்ஸ் 2 சிக்ஸர்கள், 3 ஃபோர்கள் உட்பட 26 பந்துகளில் 36 ரன்கள் எடு்த்த நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்தில் அன்சாரியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நான்காவதாக களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ், 2 சிக்ஸர்கள், 2 ஃபோர்கள் உட்பட 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்தில் அன்சாரியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஐந்தாவதாக களம் இறங்கிய திலக் வர்மா நிதானமாக ஆடி 17 பந்துகளில் 21ரன்கள் எடுத்திருந்தார். 6 ஆவதாக ஆடிய ஹர்த்திக் பாண்டியா 1 சிக்ஸர், 3 ஃபோர்கள் என 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் மலிங்கா பந்தில் கிஷானிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ஆட்டமிழந்தார். 7 ஆவதாக களம் இறங்கிய நமன் திர் மூன்று பந்துகளில் ஒரு ரன்கூட எடுக்காமல் மலிங்கா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 8ஆவதாக களம் இறங்கிய மிட்செல் சாண்ட்னர் ரன் ஏதும் எடுக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாகவே 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (Etv Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.