ETV Bharat / sports

ஐபிஎல் 2025: தல வந்தும் தலைவிதி மாறலயே! சொந்த மண்ணில் சொதப்பிய சிஎஸ்கே! - KKR BEAT CSK

ஐபிஎல் சீசன் 2025 நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை படுதோல்வி
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை படுதோல்வி (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 11, 2025 at 10:31 PM IST

2 Min Read

சென்னை: ஐபிஎல் சீசன் 2025ல் சென்னை அணி-கொல்கத்தா அணி இடையேயான 25ஆவது போட்டியில் சென்னை அணியில் விளையாடிய யாரும் சிறப்பாக ஆடவில்லை. எனவே கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெற்றது.

ஐபிஎல் சீசன் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தோனி தலைமையிலான சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து, ஹர்ஷித் ராணாவின் பந்தில் அஜிங்க்யா ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய கான்வே 2 ஃபோர்கள் என அதிரடியாக ஆடத் தொடங்கி 11 பந்துகளில் 12 ரன்களை எடுத்து மொயீன் அலி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.

மூன்றாவதாக வந்த திரிபாதி 16 ரன்கள் எடுத்த நிலையில் நரைன் பந்து வீச்சில் அவுட் ஆனார். நான்காவதாக வந்த விஜய் சங்கர் 2 ஃபோர்கள் ஒரு சிக்ஸர் என அதிரடி காட்டிய போதிலும் 21 பந்துகளில் 29 ரன்களை எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் வைபவ் அரோராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஐந்தாவதாக வந்த சிவம் துபே 3 ஃபோர்கள் உட்பட 29 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஆறாவதாக வந்த அஸ்வின் மிக மோசமாக விளையாடி 7 பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்த நிலையில் ஹர்ஷித் ரானாவின் பந்தில் வைபவ் அரோராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் பின்னர் அடுத்தடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா இருவரும் ஒரு ரன்கூட எடுக்காமல் அவுட் ஆகினர்.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் 1000 பவுண்டரிகள்; விராட் கோலி இமாலய சாதனை!

8வது வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் தோனி ஒரே ஒரு ரன் எடுத்து நரைன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த நூர் அகமது எட்டு பந்துகளை எதிர் கொண்டபோதிலும் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அன்ஷுல் காம்போஜ் மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ரன்களை மட்டுமே சென்னை அணி எடுத்திருந்தது. கொல்கத்தா அணியின் நரைன் நான்கு ஓவர்களை வீசி 3 விக்கெட்களை எடுத்திருந்தார். ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி இருவரும் தலா 4ஓவர்கள் வீசி தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

104 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி வீரர்கள் களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய குயின்டன் டி காக் 3 சிக்ஸர்கள் உட்பட 16 பந்துகளில் 23 ரன்களை குவித்த நிலையில், அன்ஷுல் காம்போஜ் பந்தில் அவுட் ஆனார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சுனில் நரைன் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் நூர் முகமது பந்தில் அவுட் ஆனார்.

மூன்றாவதாக களம் இறங்கிய அஜிங்க்யா ரஹானே 17 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார். நான்காவதாக களம் இறங்கிய ரிங்கு சிங் நிதானமாக விளையாடி 12 பந்துகளில் 15 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாகவே, அதாவது 10.1 ஓவரிலேயே 2 விக்கெட்களை மட்டும் இழந்து 8 விக்கெட் வி்த்தியாசத்தில் 107 ரன்கள் எடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது. தோனி தலைமையில் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படுதோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.