சென்னை: நாளை (மே 24) மற்றும் மே 25ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஃபேன் பார்க்குகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் ஃபேன் பார்க் போட்டிகளை மைதானத்தில் காண முடியாதவர்களுக்கு தங்களது சொந்த ஊரிலேயே நூற்றுக்கணக்கன ரசிகர்களுடன் நேரில் பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஐபிஎல் ஃபேன் பார்க்குகள் வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறுகளில் அமைக்கப்படுகிறது. இந்த ஐபிஎல் ஃபேன் பார்க்குகளில் நுழைவு கட்டணம் இன்றி ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முதன்மை மேலாளர் மோகன் காஜூலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ”2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதற்கான ஃபேன் பார்க் (fan park) (ரசிகர்கள் கிரிக்கேட் போட்டி-ஐ பொதுவெளியில் கண்டுகளிக்கும் அரங்கம்) 50க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் மே 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டிக்கான ஃபேன் பார்க் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கேசிஜி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 24ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் மோதும் போட்டி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றது.
அதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி மதியம் 2.30 மணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிகள் காரப்பாக்கத்தில் உள்ள கேசிஜி கல்லூரி ஃபேன் பார்க்கில் திரையிடப்படுகிறது.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள்... வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்!
தமிழ்நாட்டில் ஃபேன் பார்க்கிற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த ஃபேன் பார்க்கில் 22 அடி எல்இடி திரையில் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இந்த போட்டிகளை காண 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கேசிஜி கல்லுரியில் ரசிகர்கள் வந்து போட்டியை காண அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மெரினா கடற்கரையிலும் பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபேன் பார்க்கு அமைக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.