லிவிங்ஸ்டோன் வீசிய ஆட்டத்தின் 16வது ஓவரின் 2வது பந்தில் பிட் சால்ட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அஸ்வின். இதையடுத்து சிஎஸ்கே ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் தோனி களமிறங்கினார். பிட்சை நோக்கி அவர் நடந்து வந்தபோது தோனி..தோனி... என்று ரசிகர்கள் எழுப்பிய கரகொலியில் விளையாட்டரங்கமே சில நிமிடங்கள் அதிர்ந்தது.
ஆர்சிபி வரலாற்று வெற்றி! துவண்டுபோன சென்னை ரசிகர்கள்! - CSK VS RCB LIVE UPDATE

Published : March 28, 2025 at 7:07 PM IST
|Updated : March 28, 2025 at 11:41 PM IST
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 7:30 மணியளவில் இப்போட்டி தொடங்குகிறது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா அணியை வென்ற உற்சாகத்துடன் ஆர்சிபி அணி சென்னையில் இன்று களமிறங்குகிறது. இதேபோன்று, தான் ஆடிய முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய பலத்துடன் சிஎஸ்கே களமாட உள்ளது. இதனால் CSK, RCB இரு அணிகளுக்கு இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் விளையாடும் சிஎஸ்கே அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவிசந்திரன் அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டி.ஹுடா, ஆர்.திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்) நூர் அகமது, எம். பத்திரனா, கலீலா அகமது.
ஆர்சிபி அணி விவரம்: பில் சால்ட், விராட் கோலி, டி. படிக்கல், ஆர். பட்டிதார் கேப்டன்), எல். லிவிங்ஸ்டன், ஜே.சர்மா (விக்கெட் கீப்பர்), டி. டேவிட், கே.பாண்டியா, பி.குமார். ஜே. ஹெசல்வுட். ஓய்.தயாள்.
LIVE FEED
அஸ்வின் அவுட் - தோனி இன்!
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் காலி!
யாஸ் தயாள் வீசிய ஆட்டத்தின் 13 ஓவரின் முதல் பந்திலேயே கிளீன் போல்ட்டாகி வெளியேறினார் சிஎஸ்கேவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா. அவர் 31 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். அதே ஓவரின் 5வது பந்தில் கிளீன் போல்ட்டாகி நடையைக் கட்டினார் சிவம் துபே. அவர் 15 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே!
லிவிங்ஸ்டோன் வீசிய ஆட்டத்தின் 9-வது ஓவரின் 5-வது பந்தில் குர்னால் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களிலேயே வெளியேறினார் சாம் கர்ரன். 9 ஓவர்கள் 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது
அடுத்த விக்கெட்டும் காலி!
புவனேஷ்குமார் வீசிய ஆட்டத்தின் 5-வது ஓவரின் 4-வது பந்தில் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா வசம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்தில் வெளியேறினார் தீபக் ஹுடா. மெயின் அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில், மூன்றாவது நடுவரிடம் ஆர்சிபி முறையிட்டதில், பந்து பேட்டில் பட்டு சென்றது உறுதியானதை அடுத்து ஹுடா அவுட் என்று அறிவிக்கப்பட்டது.
சிஎஸ்கே-வுக்கு ஆரம்பமே அதிர்ச்சி!
ஆர்சிபியின் ஹேசன்வுட் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் சிஎஸ்கேவின் துவக்க ஆட்டக்காரரான ராகுல் திரிபாதி பில் சால்ட் வசம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல், அதே ஓவரின் கடைசி பந்தில் மனோஜ் பாந்தேஜிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். 4 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்களை எடுத்துள்ளது. ரச்சின் 9 ரன்களுடனும், ஹுடா 4 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்
சிஎஸ்கேவுக்கு 197 ரன்கள் டார்கெட் நிர்ணயித்த ஆர்சிபி!
சாம் கர்ரன் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆர்சிபி அணியின் டிம் டேவிட் அடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய (ஹாட்ரிக் சிக்ஸர்) ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.ஆட்ட நேர முடிவில் ஆர்சிபி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. 197 ரன்கள் வெற்றி இலக்குடன் சிஎஸ்கே அடுத்து களமிறங்க உள்ளது.
ஆர்சிபியின் வேகத்தை கட்டுப்படுத்திய பத்திரனா!
18 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. அதாவது கிட்டதட்ட 10 ரன் ரேட் விதத்தில் இருந்தது. இந்த நிலையில் 19 வது ஓவரை வீசிய பத்திரனா ஒரேயொரு ரன்னை மட்டும் கொடுத்து ஆர்சிபியின் படிதார் மற்றும குர்னால் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்தி ஆர்சிபியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.
படிதார் -50!
கலீல் அகமது வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரின் முதல் பந்தில் அடித்த பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார் படிதார். 30 பந்துகளில் 50 ரன்களை அவர் எடுத்தார். ஆனால் அதே ஓவரின் நான்காவது பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜித்தேஸ் சர்மா. 18 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
கலக்கும் நூர் அகமது!
நூர் அகமது வீசிய ஆட்டத்தின் 16வது ஓவரின் 2வது பந்தில் லிவிங்ஸ்டோன் அபாரமான ஒரு சிக்ஸர் அடித்து ஆர்சிபி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார். ஆனால் அகமது வீசிய அடுத்த பந்திலேயே கிளீன் போல்ட்டாகி வெளியேறினார் லிவிங்ஸ்டோன். 16 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. படிதார் 38 ரன்களுடனும், சர்மா 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஆர்சிபியின் பெரிய விக்கெட்டை வீழ்த்திய அகமது!
நூர் முகமது வீசிய ஆட்டத்தின் 13 வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஆர்சிபியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் 30 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார்.
10 ஓவர்கள் முடிவில் 9.3 ரன் ரேட்டில் ஆர்சிபி!
10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 93 ரன்களை எடுத்துள்ளது. கோலி 22 ரன்களுடனும், படிதார் 11 ரன்களுடன் ஆடி கொண்டுள்ளனர்.
ஜடேஜா பந்தை உரித்தெடுத்த படிக்கல் அஸ்வின் ஓவரில் அவுட்!
சிஎஸ்கே அணியின் மற்றொரு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என பந்தை சிதறடித்தார் ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல்.ஆனால் அந்த வேகம் குறைவதற்குள், அடுத்த ஓவரில் அல்வின் வீசிய ஐந்தாவது பந்தில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 9 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் சால்ட் அவுட்!
நூர் முகமது வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் அவுட்டாகி வெளியேறினார் ஆர்சிபி ஓப்பனிங் பேட்ஸ்மேன் பில் சால்ட். அவர 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இவற்றில் ஒரு சிக்ஸரும், 5 பவுண்டரிகளும் அடங்கும். 6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.
அஸ்வினை சிக்ஸருடன் வரவேற்ற சால்ட்!
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை சிஎஸ்கே அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் வீசினார். முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஆர்சிபி அணியின் சால்ட். அத்துடன் இரண்டு பவுண்டரிகள் என இரண்டாவது ஓவரில் மட்டும் பெங்களூரு அணி 16 ரன்கள் எடுத்தது.
பவுண்டரியுடன் கணக்கை துவங்கிய பெங்களூரு!
சிஎஸ்கே அணிக்காக முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். ஒவரின் நான்காவது, ஐந்து பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட். முதல் ஓவரின் முடிவில் பெங்களூரு அணி 9 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற சிஎஸ்கே!
ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.