லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு-ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. முன்னதாக பெங்களூரு அணி டாஸ் வென்றது. பந்து வீசத் தீர்மானித்தது.
இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங்கில் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, தலா 3 சிக்ஸர்கள், 3 ஃபோர்கள் என 17 பந்துகளில் 34 ரன்களை எடுத்து லுங்கி நிகிடி பந்தில் அவுட் ஆனார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஹெட் 10 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஸ்வர் பந்தில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவதாக களம் இறங்கிய இஷான் கிஸான் 5 சிக்ஸர்கள், 7 ஃபோர்கள் என அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 94 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4ஆவதாக களம் இறங்கிய கிளாசென் தலா 2 சிக்ஸர், 2 ஃபோர்கள் என 13 பந்துகளில் 24 ரன்கள் குவித்து சுயாஷ் சர்மா பந்தில் அவுட் ஆனார்.
5ஆவது வீரராக களம் இறங்கிய அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்களை குவித்த நிலையில் குருணால் பாண்டியா பந்தில் அவுட் ஆனார். 6 ஆவது வீரராக ஆட வந்த நித்தேஷ் ரெட்டி வெறும் 4 ரன்களிலும், அவருக்கு அடுத்து வந்த அபினவ் மனோகர் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 7 ஆவதாக ஆட வந்த 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தார். ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 231 ரன்களை எடுத்தது.
இதையும் படிங்க: சென்னையில் முதல்முறையாக IPL Fan Park.. அனுமதி இலவசம்! எங்கு தெரியுமா?
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிலிப் சால்ட் 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான அடித்தளம் இட்ட நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் அவுட் ஆனார்.
மூன்றாவதாக விளையாட வந்த மாயாங் அகர்வால் 11 ரன்களுடனும், அவருக்கு அடுத்து விளையாடிய ரஜத் படிதார் 18 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 5ஆவதாக ஆட வந்த ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஜெய்தேவ் பந்தில் அவுட் ஆனார்.
6ஆவதாக களம் இறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரு ரன் கூட எடுக்காமலும், 7 ஆவதாக விளையாடிய குருணால் பாண்டியா 8 ரன்களும், அடுத்து வந்த டிம் டேவிட் ஒரு ரன்னும், புவனேஸ்குமார் 3 ரன்களும், யாஸ் தயாள் 3 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 10 ஆவதாக களம் இறங்கிய லுங்கி நிகிடி ஒரு ரன்கூட எடுக்கவில்லை. 20 ஓவரில் 10 விக்கெட்களை இழந்து 189 ரன்களை மட்டுமே பெங்களூரு அணி எடுத்தது. இதையடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.