சென்னை: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரும், கேப்டனுமான ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். நேற்று ஐபிஎல் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் கோலி, பட்டிதார் முதல் இன்னிங்ஸில் அபார பேட்டிங்கில் 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. மும்பை அணியின் பவுலிங்கில் போல்ட், ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து விளையாடிய மும்பை அணியின் கேப்டன் பாண்டியா, திலக் வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழந்த நிலையில், 209 ரன்கள் எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இப்போட்டியில் 2 விக்கெட்கள் கைப்பற்றிய ஹர்திக் பாண்டியா 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்களும், 5000 ரன்களும் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் லிவிங்ஸ்டன் விக்கெட்டை எடுத்ததன் மூலம் 200 விக்கெட்கள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக லக்னோ அணிக்கெதிரான போட்டியில் பாண்டியா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் இந்தியர்; விராட் கோலி இமாலய சாதனை!
இதுவரை டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள், 200 விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்
- டுவைன் பிராவோ - 6970 ரன்கள் மற்றும் 631 விக்கெட்கள்
- ஷகிப் அல் ஹசன் - 7438 ரன்கள் மற்றும் 492 விக்கெட்கள்
- ஆண்ட்ரி ரஸல் - 9018 ரன்கள் மற்றும் 470 விக்கெட்கள்
- முகமது நபி - 6135 ரன்கள் மற்றும் 368 விக்கெட்கள்
- சமித் படேல் - 6673 ரன்கள் மற்றும் 352 விக்கெட்கள்
- கியாரன் போலார்டு - 13,537 ரன்கள் மற்றும் 326 விக்கெட்கள்
- ரவி பொபாரா - 9486 ரன்கள் மற்றும் 291 விக்கெட்கள்
- டேனியல் கிறிஸ்டியன் - 5848 ரன்கள் மற்றும் 281 விக்கெட்கள்
- மொயின் அலி - 7140 ரன்கள் மற்றும் 375 விக்கெட்கள்
- ஷேன் வாட்சன் - 8821 ரன்கள் மற்றும் 343 விக்கெட்கள்
- முகமது ஹஃபீஸ் - 7946 ரன்கள் மற்றும் 202 விக்கெட்கள்
- ஹர்திக் பாண்டியா - 5390 ரன்கள் மற்றும் 200 விக்கெட்கள்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்