ETV Bharat / sports

2025 ஐபிஎல் சீசன்: 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய குஜராத் - 2025 IPL SEASON

2025 ஐபில் சீசனின் 35ஆவது போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

குஜராத் அணி வெற்றி
குஜராத் அணி வெற்றி (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 19, 2025 at 8:16 PM IST

2 Min Read

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் சீசனின் 35ஆவது போட்டியில் குஜராத்-டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லி அணி பேட்டிங்கில் இறங்கியது. தொடக்க ஆட்டக்கார ராக களம் இறங்கிய டெல்லி அணியின் அபிஷேக் போரெல் 9 பந்துகளில் 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய காருன் நாயர், 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

மூன்றாவதாக களம் இறங்கிய ராகுல் 14 பந்துகளில் 28 ரன்களை எடுத்து அதிரடி காட்டிய நிலையில் பிராசித் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நான்காவதாக களம் இறங்கிய அக்சார் நிதானமாக ஆடி 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐந்தாவதாக விளையாட வந்த ஸ்டுப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து சிராஜ் வீசிய பந்தில் பிராசித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆறாவதாக வந்த அசுதோஷ் சர்மா 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார். சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த விப்ராஜ் நிஹாம் ஒரு ரன்கூட எடுக்காமல் வந்த வேகத்தில் அவுட் ஆகி திரும்பினார். அடுத்து ஆட வந்த டோனோவன் ஃபெரீரா ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து அவுட் ஆனார். 9ஆவதாக களம் இறங்கிய மிச்சல் ஸ்டார்க் 2 ரன்களும், 10ஆவதாக களம் இறங்கிய குல்தீப் யாதவ் 4 ரன்களும் எடுத்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து டெல்லி அணி 203 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் பிரசித் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: "நாட்டின் மிகப் பெரிய படை நாம் தான்" - வீடியோ வெளியிட்டு பேசிய விஜய்!

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. குஜராத் அணியின் சாய் சுதர்ஷன் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுப்மான் கில் 5 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். மூன்றாவதாக வந்த ஜோஸ் பட்லர் 11 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள் என 54 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து அணியை வலுவான நிலையில் நிறுத்தினார்.

நான்காவதாக ஆட வந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐந்தாவதாக ஆடவந்த ராகுல் 11 ரன்கள் எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாகவே 19.2 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 204 ரன்களை குஜராத் அணி எடுத்தது. 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.