ETV Bharat / sports

CSK VS RCB: 17 வருட சாதனையை தக்க வைக்குமா சென்னை அணி? இரு அணி ரசிகர்கள் சொல்வதென்ன? - CSK VS RCB

ஐபிஎல்லில் 17 வருட சாதனையை முறியடிக்க விடாமல் இந்த வருடமும் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்தும் என சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த சென்னை ரசிகர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் போட்டியை காண வந்த ரசிகர்கள்
சென்னையில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் போட்டியை காண வந்த ரசிகர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 28, 2025 at 8:13 PM IST

Updated : March 28, 2025 at 11:20 PM IST

3 Min Read

சென்னை: சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 28) நடைபெற இருக்கிறது. போட்டியை காண ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் சென்னைக்கு அணிக்கான இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் கடைசி போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் சென்னை அணி தோல்வி பெற்றதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்தது. அந்த போட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை அணி இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல கடந்த 17 ஆண்டுகளில் பெங்களூரு அணி சென்னையில் நடந்த போட்டியில் சென்னையை ஒருமுறை மட்டுமே வீழ்த்தியுள்ளது. அதுவும், ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008 மே 21ஆம் தேதி நடந்த போட்டியில் தான். அதன் பிறகு சென்னை அணியை அதன் சொந்த இடத்தில் பெங்களூருவால் வீழ்த்த முடியவில்லை.

சென்னை அணி ரசிகர்
சென்னை அணி ரசிகர் (ETV Bharat Tamil Nadu)

இன்று நடைப்பெறும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கான போட்டியை நேரில் காண திருப்பூரில் இருந்து வந்த சிஎஸ்கே ரசிகர் ராஜேஷ், சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், ஐபிஎல்லில் சென்னை போட்டிக்காக திருப்பூரிலிருந்து வந்திருப்பதாக தெரிவித்தார். கடந்த 17 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி தற்போது 18-வது ஆண்டாக விளையாட சென்னை வந்திருக்கிறார். இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அவர்கள் இருக்கின்றனர். அவருடைய முழு முயற்சியும் கொடுப்பார்கள்.

சென்னை, மும்பை போட்டிகள் எப்படி இருக்குமோ? அதே போன்று தான் சென்னை பெங்களூரு போட்டியும் இருக்கும். எதுவாக இருந்தாலும் சென்னை வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக இருக்கிறது. அதேபோல பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என சில சென்னை ரசிகர்களே ஆசைப்படுகின்றனர், ஆனால் கண்டிப்பாக இந்த போட்டியில் சென்னை வெற்றி பெறும்'' என தெரிவித்தார்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த சிஎஸ்கே ரசிகர் சந்தோஷ் கூறுகையில், '' நேரடியாக போட்டியை பார்க்க வேண்டும் என வந்திருக்கிறோம். 17 வருட சாதனையை முறியடிக்க விடாமல் இந்த வருடமும் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்தும். விராட் கோலியையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எதிரணியாக பெங்களூரு அணியும் அதிக ஸ்கோரை அடித்தால் மேட்ச் விறுவிறுப்பாக இருக்கும். அதேபோல இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுமே அதிக ரன் அடித்து வருகின்றனர். இன்று நடைபெறும் போட்டியிலும் அதிக ரன்களை அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும். அப்படி கொண்டு செல்லும் பட்சத்தில் ரசிகர்களுக்கு சிறப்பான போட்டியாக இருக்கும்'' என்றார்.

சென்னை அணி ரசிகர்கள்
சென்னை அணி ரசிகர்கள் (ETV Bharat Tamil Nadu)

நாவலூரை சேர்ந்த ஆர்சிபி ரசிகர் நடராஜ் கூறுகையில்,'' இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும். சென்னை அணிக்கு உள்ளூர் ரசிகர்கள் அதிக அளவு இருந்தாலும் அதே அளவு ரசிகர்களை விராட் கோலி பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. அதேபோல் இன்று நடைபெறும் போட்டியிலும் சென்னை அணியை பெங்களூரு அணி வீழ்த்தும். இந்த போட்டியில் கண்டிப்பாக பெங்களூரு அணி வெற்றி பெறும்'' என தெரிவித்தார்.

சேலத்தில் இருந்து வந்திருந்த விஷால் கூறுகையில், '' இரண்டு அணிகளுமே சிறப்பான வீரர்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக பெங்களூரு அணி பேட்டிங்கில் வலுவாக இருக்கிறது. சென்னை அணியை பொறுத்தவரையில் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக இருக்கிறது. இருந்தாலும் வெற்றி பெற்ற வீரர்களை வைத்து விளையாடி வருகின்றனர். அதேபோல சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் எனவும் எதிரணி அடிக்கும் ரன்னை பொறுத்து எப்படி விளையாட வேண்டும்? என்ற முடிவை எடுத்து சேஸ் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். தோனியை குறித்து சொல்ல வேண்டுமென்றால் போட்டியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அவரை நாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருப்போம். சென்னையில் நடைப்பெறும் போட்டி என்பதால் சென்னை அணி கண்டிப்பாக வெற்றி பெறும்'' என தெரிவித்தார்.

Last Updated : March 28, 2025 at 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.