ஹைதராபாத்: இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், பண்ட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 465 ரன்கள் எடுத்தது.
பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் . ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு பிரைடன் கர்ஸ் பந்தில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் ஆரம்பத்தில் ஒரளவு பொறுமையாக ரன்கள் சேர்த்த நிலையில், 30 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார்.
மறுமுனையில் பொறுமையாக விளையாடிய கே.எல்.ராகுல் 137 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் அவுட் ஆனார். அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சுப்மன் கில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் அவுட் ஆனார்.
இதையும் படிங்க: பும்ராவின் அசத்தல் பந்துவீச்சில் சுருண்ட இங்கிலாந்து... விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட்
அடுத்து களம் இறங்கிய ரிஷப் பந்த் 118 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயப் பஷீர் பந்தில் ஜாக் கிராலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். 6 ஆவதாக களம் இறங்கிய கருண் நாயர் 20 ரன்களுடன் அவுட் ஆனார். 7ஆவதாக களம் இறங்கிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்திருந்தார்.
8ஆவதாக களம் இறங்கிய ஷர்துல் தாக்கூர் 4 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும், பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 11 ஆவது வீரராக களம் இறங்கிய பிரசித் கிருஷ்ணா ரன் எதுவும் எடுக்காமல் ஷோயப் பஷீர் பந்தில் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 96 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 364 ரன்களை எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 370 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்