ஹைதராபாத்: ஜெர்மனியில் நடைபெற்ற 10மீ ஏர் ரைபிள் போட்டியில் இளவேனில் வாலறிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். ஜெர்மனி முனிச் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவை சேர்ந்த இளவெனில் வாலறிவன் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியில் 231.2 புள்ளிகளுடன் 3வது இடம்பிடித்தார். இதன்மூலம் இளவேனில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் 10மீ ஏர் ரைபிள் போட்டியில் சீனாவை சேர்ந்த வாங் ஜிஃபெய் 252.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், தென் கொரியா நாட்டை சேர்ந்த குவோன் யுஞ்சி 252.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இளவேனில் தகுதிச்சுற்று போட்டியில் அபாரமாக விளையாடினார். இறிதிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கொரிய ஒலிம்பிக் சாம்பியன் குவோன் யுஞ்சியை விட 0.3 புள்ளிகள் மட்டுமே பின் தங்கி இருந்தார். இப்போட்டியில் இளவேனில் தனது 20வது முறை துப்பாக்கிசூட்டில் முதலிடத்தில் இருந்தார். ஆனால் 21வது முறையில் பின்தங்கி மூன்றாவது இடத்தை பிடித்தார்.
Behind the scenes 🎬
— ISSF (@issf_official) June 10, 2025
An unseen look at the 10m Air Rifle Women Final 🔥#ISSF #ISSFWorldCup #ShootingSports pic.twitter.com/UoO6GblyVo
கடந்த முறை பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டி 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இளவேனில் வாலறிவன் 252.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அப்போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓசியான் முல்லர் 251.9 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், சீனாவின் ஜுயாலே ஜாங் 229 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதையும் படிங்க: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... நிக்கோலஸ் பூரன் 29 வயதில் ஓய்வு!
இளவேனில் கடந்த வருடம் பாரீஸ் ஒலிம்பிக் 10மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்தார். மேலும் நேற்று நடைபெற்ற 10மீ ஏர் ரைபிள் போட்டியில் பங்கேற்ற மற்ற இந்தியர்களான அனன்யா நாயுடு 632.4 புள்ளிகளுடன் 15வது இடத்திலும், ஆர்யா போர்ஸே 628.2 புள்ளிகளுடன் 60வது இடத்தையும் பிடித்தனர். இந்நிலையில் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டி இறுதிச்சுற்றில் இந்தியாவை சேர்ந்த வருண் தோமர் 160.3 புள்ளிகள் பெற்று 6வது இடம் பிடித்து, தோல்வி அடைந்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.