ஹைதராபாத்: பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆர்சிபி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,'பெங்களூருவில் துரதிருஷ்டவசமாக நேற்று நிகழ்ந்த சம்பவம், ஒட்டுமொத்த ஆர்சிபி அணிக்கும் தாங்கமுடியாத மனவேதனை மற்றும் வலியை கொடுத்துள்ளது.
𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗦𝘁𝗮𝘁𝗲𝗺𝗲𝗻𝘁: 𝗥𝗼𝘆𝗮𝗹 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝘂𝗿𝘂
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 5, 2025
The unfortunate incident in Bengaluru yesterday has caused a lot of anguish and pain to the RCB family. As a mark of respect and a gesture of solidarity, RCB has announced a financial… pic.twitter.com/C50WID1FEI
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பக்கபலமாக இருக்கும் நோக்கில், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்படும். மேலும், இந்த துன்ப நிகழ்வில் காயமடைந்த ரசிகர்களுக்கு உதவும் வகையில் 'RCB Cares' என்ற பெயரில் நிதி வசதியும் ஏற்படுத்தப்படும். எங்கள் இதயத்தில் எப்போதும் இருக்கும் ரசிகர்களின் துயரமான தருணத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்' Zன்று ஆர்சிபி நிர்வாகம் உருக்கமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெங்களூரு அணி வரவேற்பு விழாவில் துயரம் - கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு! காயமடைந்த 47 பேரின் நிலை என்ன?
முன்னதாக, பெங்களூருவில் நேற்று நிகழ்த்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்ட ஆர்சிபி அணியினர், இறந்தவர்களுக்காக சில நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗦𝘁𝗮𝘁𝗲𝗺𝗲𝗻𝘁: 𝗥𝗼𝘆𝗮𝗹 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹𝘂𝗿𝘂
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 4, 2025
We are deeply anguished by the unfortunate incidents that have come to light through media reports regarding public gatherings all over Bengaluru in anticipation of the team’s arrival this… pic.twitter.com/C0RsCUzKtQ
அதனை தொடர்ந்து வாசிக்கப்பட்ட இரங்கல் குறிப்பில், 'ஆர்சிபி அணியினரை காணும் ஆவலில் சின்னசாமி மைதானத்துக்கு வெளியே நேற்று மதியம் பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது துரதிருஷ்டவசமாக நிகழ்ந்த சம்பவம் குறித்த செய்திகள் மிகுந்த மனவேதனையை அளிக்கின்றன.ஒவ்வொரு ரசிகரின் பாதுகாப்பு மற்றும் நலனே எங்களுக்கு எல்லாவற்றையும் விட முக்கியம். இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவதுடன், தங்களின் அன்பானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியினருக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் பங்கேற்க, குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச பாஸ்கள் வழங்கப்பட்டு ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.
ஆனால், விராட் கோலி உள்ளிட்ட ஆர்சிபி அணியினரை காணும் ஆவலில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் சின்னசாமி மைதானத்துக்கு வெளியே குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி மீது வழக்குப்பதிவு: இதனிடையே, 11 பேர் உயிரிழந்ததற்கும், பலர் படுகாயம் அடைந்ததற்கும் காரணமான சம்பவம் தொடர்பாக ஆர்சிபி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் (டிஎன்ஏ) மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 115, 118 மற்றும் 105 -இன் கீழ், பெங்களூரு, கப்பன் பார்க் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.