ETV Bharat / sports

ஐபிஎல் சீசன் 2025: டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி! - 2025 IPL SEASON

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி, டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ராகுல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார்.

விராட் கோலி
விராட் கோலி (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 10, 2025 at 9:30 PM IST

2 Min Read

பெங்களூரு: 2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை, டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றி பெற்றது.

2025ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனின் 24ஆவது போட்டியில் டெல்லி- பெங்களூரு அணிகள் விளையாடின. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்கிய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றது. முதலில் அந்த அணி பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய விராட் கோலி 22 ரன்கள் மட்டுமே எடுத்து விப்ராஜ் நிகம் வீசிய பந்தில் மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் திரும்பினார்.

ரஜத் படிதார் நிதானமாக ஆடி 25 ரன்களை எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டோன் வெறும் 4 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து வந்த ஜித்தேஸ் சர்மாவும் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். குருணால் பாண்டியா மிக மிக நிதானமாக ஆடி 18 பந்துகளில் 18 ரன்களை எடுத்து விப்ராஜ் நிகம் வீசிய பந்தில் அசுதோஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையும் படிங்க: 'நாயகன் மீண்டும் வரார்'... சென்னை அணிக்கு தோனி மீண்டும் கேப்டன் - ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

அவருக்கு அடுத்து வந்த டிம் டேவிட் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். புவனேஸ்வர் குமார் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்களை இழந்து 163 ரன்களை எடுத்தது. டெல்லி அணியின் குல்தீப் யாதவ் , விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்ததாக 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட்டத்தை தொடங்கியது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 7 பந்துகளில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து யாஷ் தயாள் வீசிய பந்தில் ரஜத் படிதாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கும் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் புவனேஸ்வர் வீசிய பந்தில் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அபிஷேக் போரெலும் வெறும் ஏழு ரன்களின் அவுட் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடினார். 5 சிக்ஸர்கள், 7 ஃபோர்கள் உட்பட 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருக்கு அடுத்து களம் இறங்கிய அக்சர் படேல் 2 ஃபோர்கள் உட்பட 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். ஆனால், சுயாஷ் சர்மா வீசிய பந்தில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு சிக்ஸர், 4 ஃபோர்கள் உட்பட 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னதாகவே 17.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் மட்டுமே இழந்து 169 ரன்களை டெல்லி அணி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றியை பெற்றது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.