சென்னை: முதல் ரக்பி பிரிமியர் லீக் சீசன் மும்பையில் நடைபெற உள்ளது. வருகின்ற ஜூன் 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ள இப்போட்டி தொடரில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, ஒடிசா ஆகிய 6 அணிகள் மோதுகின்றன.
இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், ரக்பி இந்தியாவின் பொருளாளரான செந்தில் வி. தியாகராஜன், இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜூனா (தவெக நிர்வாகி), நடிகரும், முன்னாள் ரக்பி வீரருமான வினய் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆதவ் அர்ஜூனா பேசும்போது, "தமிழ்நாடு கலச்சாரம் மிகுந்த மாநிலம். இங்கிலாந்தில் முதலில் விளையாடப்பட்ட கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளம் நம் மண்ணில் தான் துவங்கியது. கபடி, கால்பந்து, கூடைப்பந்து என அனைத்திற்குமான அடித்தளமும் இங்கு தான் துவங்கியது. நிச்சயமாக ரக்பி விளையாட்டிற்கு வெற்றிக் கிடைக்கும்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், முன்னாள் ரக்பி வீரருமான வினய் ராய், ”ரக்பி பல ஆண்டுகளாக விளையாடியுள்ளேன். ரக்பி விளையாட்டில் அடிக்கடி காயமடையக்கூடிய சூழல் ஏற்படும். காயத்தின் காரணமாக படத்தில் நடிப்பது சிரமமாக உள்ளது. காயமடைந்தாலும் எவ்வித பிரச்சனையும் இன்றி நடிப்பதற்கு எனக்கு குறைந்த வயது இல்லை. இதனால் தான் தற்போது விளையாட முடியாத சூழல் உள்ளது” என்றார்.
ரக்பி இந்தியாவின் பொருளாளராக உள்ள செந்தில் வி. தியாகராஜன், ”இந்தியாவில் ரக்பி தற்போது தான் வளர்ந்து வருகிறது. மேலும் ஒடிசாவில் ரக்பிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இலங்கையில் ரக்பி அனைவருக்கும் பிடித்த விளையாட்டாக உள்ளது." என்றார்.

ரக்பி போட்டியில் தமிழக விளையாட்டு வீரர்கள் இல்லையே என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டின் 2 வீரர்கள் பெயர் இருந்தது. அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் விளையாட முடியவில்லை.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா!
தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் ரக்பி போட்டி நிச்சயம் நடத்தப்படும். ஊர் விழாக்களில் கபடி, கூடைப்பந்து விளையாடுவது போல கொஞ்சம் கொஞ்சமாக ரக்பி வளரும். கல்லூரிகளில் ரக்பிக்கான கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக முதல் ரக்பி பிரிமியர் லீக் சீசனின் சென்னை புல்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.