மேஷம்: வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதேனும் புதிய இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்கவும். பணியில் மனம் லயித்து வேலை செய்யவும். அதற்காக அளவுக்கு அதிகமான வகையில் வேலை செய்யக்கூடாது. ஏனென்றால், அனைவரது கவனமும் உங்கள் பக்கம் இருக்கும்.
ரிஷபம்: உங்களது கவனம் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உறவுகள் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று முழுவதும் அவர்களது எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.
மிதுனம்: இன்றைய தினத்தில் தொழிலைவிட, உடல் நலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உடற்பயிற்சி செய்யக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாள். உங்களது சிறந்த மார்க்கெட்டிங் உத்தி மூலம், அதிகபட்ச லாபத்தை ஏற்படுத்த முடியும்.
கடகம்: இன்றைய தினம் தயக்கம் இல்லாமல் செயல்படுவீர்கள். உங்களுக்கு இருக்கும் எதிர்மறையான எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் விட்டு விட்டு, பொறுப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல், பணியைத் தொடரவும்.
சிம்மம்: பதவி உயர்வை அடைய, உங்கள் வேலையின் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். அதற்காக, கூடுதல் வேலைகளையும் மேற்கொள்வீர்கள். இதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
கன்னி: குறிக்கோள்கள் மற்றும் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். கடும் உழைப்பிற்குப் பிறகு, புத்துணர்ச்சி பெற விருந்து, சமூக நிகழ்ச்சிகள் அல்லது திருமண விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
துலாம்: இன்று மக்கள் கூறும் அனைத்தையும் ஏற்றுக் கொள்வீர்கள். அதில், குறை கூற மாட்டீர்கள். உங்கள் சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். உங்களது நீக்குப் போக்காக அணுகுமுறையின் மூலம், உங்களது கருத்துக்களை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.
விருச்சிகம்: உணர்வுகளை வெளிப்படுத்தும் மனநிலையில் இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன், மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ளலாம். என்னதான் இதயத்தில் உணர்ச்சிகள் அதிகம் இருந்தாலும், பொது இடத்தில் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது.
தனுசு: மேலதிகாரிகள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்கு தகுதியானவர் தான்.
மகரம்: வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். உங்களது கடுமையான உழைப்பு, மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டும். வாழ்க்கைத் துணையுடன், சச்சரவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால், இன்று அந்த மனக்கசப்பு நீங்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்: உங்கள் மனதில் நிதி நிலைமை மற்றும் வருமானம் தொடர்பான எண்ணங்கள் அல்லது கவலைகள் மட்டுமே இருக்கும். மாலையில் நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்: உணர்வுகளை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். உங்களது சிறந்த பேச்சாற்றல் காரணமாக, மக்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வார்கள். அறிவாளிகளுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இது நீங்கள் பணியில் உயர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.