மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகாரர்களின், இன்றைய பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: இன்றைய தினம் நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் நடந்து கொள்ளுவீர்கள். உங்களுக்கு பிடித்தமான நாளாக அமையும். உங்கள் குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள, அவர்களுடன் நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தைகளுக்காக, நீங்கள் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள்.
ரிஷபம்: மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இது ஒரு லாபகரமான நாளாக இருக்கும். எனினும் அவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதனால், ஏமாற்றம் அல்லது வருத்தம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. நாளின் பிற்பகுதியில், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும் வாய்ப்பு உள்ளது.
மிதுனம்: இன்று நீங்கள், சிந்தனையில் மூழ்கி இருப்பீர்கள். சிறிய சந்தோஷங்கள் மூலம் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பாராத விஷயங்களில் வெற்றி அடைவீர்கள். அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பீர்கள்.
கடகம்: உங்கள் முயற்சிக்கான பலன்கள் கிடைத்து, சமூக அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உங்கள் மனிதாபிமான நடவடிக்கைகள் இன்று வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். பொழுதுபோக்கு அம்சங்களுக்காக நீங்கள் அதிகம் செலவழிப்பீர்கள்.
சிம்மம்: இன்று உங்களது ஆற்றல் மீது நம்பிக்கை வையுங்கள். அதிகபட்ச வெற்றி வாய்ப்பு இன்று உங்கள் பக்கம்தான் உள்ளது. மற்றவர்கள் உங்களை பாராட்டவில்லை என சிறிது மனம் வருத்தம் அடைவீர்கள். உங்களது அனைத்து முயற்சிக்கும் இன்று நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி: பொதுவாக இன்று பெண்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். மாலையில் நெருங்கிய உறவில் இருப்பவர்களுக்கு விருந்து கொடுக்கலாம். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நீங்கள் இனிமையாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு.
துலாம்: இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்த ஆடையை வாங்குவீர்கள். நீண்ட காலமாக நினைத்த விஷயங்களை இன்று சாதிப்பீர்கள். உங்கள் மீது அனைவரும் கவனம் செலுத்துவார்கள். உங்கள் கடின உழைப்பு, செயல்திறன் ஆகியவற்றிற்கு நல்ல பலன் கிடைக்கும். சக பணியாளர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு உதவுவார்கள்.
விருச்சிகம்: இன்றைய தினம் உங்களது வாழ்க்கை தலைகீழாக மாறப் போகும் தினமாக அமையப் போகிறது. நீங்கள் நம்பும் விஷயங்களை குறித்து மட்டும் பேசவும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பழகும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு: இன்றைய தினம் நீங்கள் மிகவும் பிசியாக இருப்பீர்கள். பலரை நீங்கள் சந்திக்க கூடும். உங்களது அறிவு திறன் காரணமாக ஒரு பெரிய ஆபத்தில் இருந்து தப்பிப்பீர்கள். மாலையில் மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளது.
மகரம்: வேடிக்கையாக பேசி அனைவரையும் மகிழ்விக்கும் உங்கள் திறன் மூலமாக, உங்களை சுற்றியுள்ள அனைவரையும் நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள். வருங்காலத்திலும் உங்களுடன் நேரம் செலவிடுவதை அவர்கள் விரும்புவார்கள். பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் உங்களது திறமையின் காரணமாக அனைவரையும் ஈர்ப்பீர்கள்.
கும்பம்: இன்று நீங்கள் அனைத்து விஷயங்களிலும் சிறந்து விளங்குவீர்கள். இன்று மதியம் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். அதனால், நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஒரு பெரிய விஷயத்தில் களமிறங்கி வெற்றி பெறுவீர்கள்.
மீனம்: சட்ட வழக்குகள் மூலம் நீங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளீர்கள். அதற்கு ஒரு திருப்தியான முடிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். மதியம் குடும்ப விஷயங்கள் தொடர்பான வேலைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் இசை அல்லது நடன வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.