மேஷம் : இன்று உங்களை நீங்களே பாராட்டிக்கொண்டு, சிறந்த வகையில் ஆடைகளை அணிந்து கொள்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியடையும். அப்படி இல்லை என்றால், நீங்கள் மேலும் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டிய உத்தியை கற்றுக் கொள்ளுவீர்கள்.
ரிஷபம்: ஒரு மேலாளராக, நீங்கள் நிறுவனத்திற்குச் சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். இன்று நீங்கள் உங்களது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுப்பீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலையைச் சமாளிக்கும் திறன் ஏற்படும்.
மிதுனம்: இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். உங்களது தினசரி பணிகளுடன் வீட்டுப் பணிகளிலும் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். திருமணம் உறவில் இரட்டை மனநிலை இருக்கும். ஏதேனும் விற்க வேண்டும் என்றால் அதற்கு இன்று உகந்த நாள்.
கடகம்: இன்று நீங்கள் பல வகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வீர்கள். அவற்றை மிகுந்த உற்சாகத்துடனும் மேற்கொள்வீர்கள். அதனால் பணிகள் எளிதாக நிறைவேறும். மிகவும் கடினமான பணிகளை கூட கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள்.
சிம்மம்: இன்று குதூகலமான நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். அலுவலகத்தில், பணியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைக்குமா? என்ற கவலை உங்களுக்கு இருக்கும். ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைக்கும்.
கன்னி: இன்று நீங்கள் மனிதாபிமானம் மிக்கவர் என்ற பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொண்ட திட்டங்கள் வெற்றி அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் காத்துக்கொண்டிருந்த நேரம் இன்று வரும்.
துலாம்: இன்று வேலை அதிகம் இருக்கும். அதன் காரணமாக எரிச்சலான மனநிலையில் இருப்பீர்கள். சூழ்நிலைகளின் காரணமாகவும், வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கவலை காரணமாகவும், உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். ஆனால் இந்த சூழ்நிலையை நீங்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.
விருச்சிகம்: நீங்கள் இன்று கடுமையாக உழைப்பீர்கள். அதோடு கூடவே நீங்கள் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வது நல்லது. வீட்டு வேலைகளில் ஈடுபட உகந்த நாளாக இருக்கும். தோட்டம், சமையல் மற்றும் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை மன விருப்பப்படி செய்வீர்கள். குடும்பத்தின் மூலம் கிடைக்கும் சந்தோஷங்கள், வேலை தொடர்பான கவலைகள் நீங்கும்.
தனுசு: உங்கள் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு, உங்கள் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களது புதுமையான ஆடை, நகை உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். நீங்கள் இன்று ஒரு காந்தம் போல் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். உங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகும். நாள் இன்று.
மகரம்: பல்வேறு வழிகளிலிருந்து பணவரவு இருக்கும். ஆனால் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அவை அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்: உங்களது கனவு இல்லம் அல்லது வாகனம் கைகூடும் வாய்ப்பு உள்ளது. கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் புதிய சொத்துக்கள் வாங்க கூடும். அதனால், அது தொடர்பான விவரங்களைச் சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.
மீனம்: ஒரு நல்ல நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் உங்கள் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே திறமையாகச் செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். உங்களது நெடுநாள் ஆசை இன்று நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.