மேஷம்: புனித வெள்ளி தினமான இன்று உங்களுக்கு ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். இதன் காரணமாக, உறவுகள் பாதிக்கப்படும். ஆனால், அவர்களின் எதிர்கால செலவுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள். இதனால், நீங்கள் நிம்மிதியாக உங்களுக்கு விருப்பப்பட்ட வேலையில் இறங்குவீர்கள்.
ரிஷபம்: ஒரு அற்புதமான நாளாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனினும் மாலையில் பதற்றம் மற்றும் மன அழுத்தம் இருக்கலாம். அதுமட்டுமல்லாது, மாலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் நெருக்கமாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மிதுனம்: உங்கள் உணவு பழக்கவழக்கத்தின் மீது தனி கவனம் செலுத்துவீர்கள். புதிய வேலைக்கான நேர்காணல் தேர்வில் நீங்கள் பங்கு பெறும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மூத்தவர்கள் மற்றும் மேல் அதிகாரிகளிடம் இருந்து ஊக்கம் பெறுவீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால் சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும். இல்லையென்றால் உணர்வு ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
கடகம்: இன்றைய தினத்தின் முதல் பகுதியில், பதற்றமான மன நிலை இருக்கும். பணியிடத்திலும் மிகவும் பதற்றமடைந்து கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். தியான பயிற்சியை கடைபிடிக்கவும். அலுவலகத்தில் நிதானத்தை இழக்க வேண்டாம். ஏனென்றால் இதன் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் மலை ஏறுவது போன்ற சவாலான நடவடிக்கைகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்: உங்களுக்குள் மறைந்திருக்கும் கலை உணர்வு வெளிப்படும். புகழ்பெற்ற கலைஞர்கள் போல் இல்லை என்றாலும், உங்களது கலைநயமிக்க பணிகள் தனித்துவம் உள்ளதாக இருக்கும். மதிய நேரத்தில், உங்கள் பேச்சாற்றல் மூலம் நீங்கள் அனைவரையும் கவருவீர்கள். பணியில் இருக்கும் போது, நீங்கள் வெளிப்படுத்தும் ஆற்றலும் உற்சாகமும், அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும்.
கன்னி: காலை மந்தமாக தொடங்கினாலும், மாலையில் நிலைமை மாறி உற்சாகம் ஏற்படும். மதியம் ஏற்பட்ட சில தடைகளின் காரணமாக உங்களுக்கு மனம் அழுத்தம் இருக்கலாம். ஆனால், மாலையில் நெருங்கியவர்கள் மற்றும் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் நேரத்தைக் கழித்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
துலாம்: நேர்வழியில் சென்று இன்று நீங்கள் வெற்றியை அடைவீர்கள். பகல் நேரத்தில் சிறிய பிரச்சினைகள் காரணமாக பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. எனினும் பேச்சுவார்த்தைகள் மூலம் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டு விடும். தொழில் துறையை பொருத்தவரை, பல்வேறு தரப்பில் இருந்து பணவரவு இருக்கும். இவை அனைத்தும் உங்களது செயல் திறன் மற்றும் கடுமையான முயற்சிகளின் பலனாகும்.
விருச்சிகம்: இன்று பல நற்செய்திகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. உங்கள் துறையில் போட்டியாளர்களை வெற்றி கொள்ள பல்வேறு விதமான முயற்சியில் இறங்கி வெற்றி அடைவீர்கள். மதிய நேரத்தில் நீங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் செயல்படுவீர்கள்.
தனுசு: உங்களது புன்னகை மூலம் உங்களை வந்தடையும் அனைத்து இன்னல்களையும் விரட்டி அடிப்பீர்கள். அனைவரின் மனதையும் கவரும் வண்ணம் இன்று இருப்பீர்கள். பணியிடத்தில், உங்கள் அறிவார்ந்த ஆலோசனைகளின் மூலம் உடன் பணிபுரிபவர்கள் பலன் அடைவார்கள். மாலை நேரத்தில், உங்கள் காதல் துணையுடன் நீங்கள் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளதால், மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
மகரம்: ஒரு விறுவிறுப்பான நாளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் சந்தோஷம் ஏற்படும். திடீரென்று நீங்கள், மிகவும் உற்சாகமாக இருப்பதைப் போல் உணர்வீர்கள். பணியிடத்தில் பல கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் தேட முயலுவதில் நேரம் அதிகம் செலவாகும். புதிய திட்டம் அல்லது புதிய வர்த்தகம் ஏதேனும் தொடங்குவதற்கு நிதி உதவி கிடைக்கும் பொதுவாக இன்று எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மிகவும் சிறந்த நாளாக இருக்கும்.
கும்பம்: இன்றைய தினம் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். பெரிய பாதிப்புகள் ஏதேனும் ஏற்படாது என்பதால், அதிகம் கவலை கொள்ள வேண்டாம். உங்களது குழந்தைகள் அல்லது உங்களது வாழ்க்கைத் துணை இன்று உங்கள் மீது கோபம் கொள்ளலாம். ஆனால், நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கவும்.
மீனம்: இன்றைய தினம் ஒரு ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். பழைய நண்பர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. பழைய நண்பர்கள் அல்லது முன்னாள் காதலரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.