மேஷம்: இன்று உங்களைத் தேடி நல்ல செய்தி வந்து சேரும். அதனால், மகிழ்ச்சி கிடைக்கும். அது நிதி ஆதாயம் குறித்த செய்தியாக இருக்கலாம் அல்லது நண்பர்களை சந்திக்கும் செய்தியாகவும் இருக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பீர்கள். அதற்கு சிறந்த வகையில் பலன் கிடைக்கும்.
ரிஷபம்: நடைமுறைக்கு ஏற்ற வகையில், விரிவாக செயல் திட்டத்தை தயாரித்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில், செயல்புரிய உதவியாக இருக்கும். உங்களது அகராதியில், தோல்வி என்பதே இல்லை. நீங்கள் ஒரு நிபுணரைப் போல பணிபுரிவீர்கள்.
மிதுனம்: வீட்டில் குதூகலமும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகள் தீர்க்கப்படும்.
கடகம்: இன்று செலவுகளை நன்றாக கட்டுப்படுத்துவீர்கள். எனினும், கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் செய்ய விரும்பமாட்டீர்கள். இது, நெருங்கியவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயலும் போது உதவியாக இருக்கும். உங்களது வேலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
சிம்மம்: இன்று அனைத்து காரியங்களும் நீங்கள் எதிர்பார்த்த வகையில் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால் அதுகுறித்து கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்கு தான் என்ற எண்ணத்துடன் மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற சரியான நபரை நீங்கள் சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
கன்னி: சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம் நீங்கள் உங்களை சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும். குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உங்களது கலாச்சாரத்தை மதிப்பதன் மூலம் குடும்ப உறவு பலப்படும்.
துலாம்: முயற்சிகள் எதுவுமே வீண் போகாது. உங்களது முயற்சிகள் தற்போது பயனளிக்கவில்லை என்றாலும், வருங்காலத்தில் நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும். இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்காது. எனினும், முயற்சியை கைவிடாமல் இருந்தால், வருங்காலத்தில் அதற்கேற்ற பலனை அடைவீர்கள்.
விருச்சிகம்: உங்களது அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறமை கொண்டவர்கள். புதுமையான கருத்துகளை உங்கள் சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு: மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தினரும், நண்பர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள். உற்சாகமான குதுகலமான மாலை உங்களுக்காக காத்திருக்கிறது.
மகரம்: திருமணம் ஆகாதவர்கள் என்றால், நீங்கள் கனவில் சந்திக்கும் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புண்டு. உங்கள் வாழ்க்கைத்துணையை சந்தித்ததில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். உங்கள் காதல் துணையும் உங்கள் மீது, நிபந்தனையற்ற அன்பைப் பொழிவார்கள்.
கும்பம்: பலமணி நேர வேலைக்கு பிறகும், உடன் பணிபுரிபவர்கள், வேலையை நிறைவு செய்யாமல் சாக்குப்போக்கு கூறுவார்கள். உங்கள் பணியை முடித்துவிட்டு, பிறகு மற்றவர்களுக்கு உதவுவது குறித்து யோசிக்கவும். உங்களது வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருந்து, மன அழுத்தத்தைப் போக்குவார்.
மீனம்: இன்று உங்களுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும் நாள். அந்த ஆதரவை கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். அனைத்து விஷயங்களும் இன்று உங்களுக்கு சாதகமாக நடைபெறும். மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனை திறனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.