தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழாவின் 10ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக ’திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில் வள்ளி, தெய்வானை உடைய மாங்கல்யத்தைச் சுற்றி வைத்த தேங்காய் ரூ.52,000க்கு ஏலம் எடுத்தது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழாவானது மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி உத்திரம் திருவிழாவானது ஏப்ரல் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாகத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனையும், நகர்வலம் ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) திருவிழாவின் பத்தாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக கோயில் வளாகத்தில் முருகப்பெருமானின் ’திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் தலைமை குழுக்கள், சோமஸ் கந்த குருக்கள் வீட்டில் இருந்து பெண் வீட்டார் சார்பில் அழைப்பு நடைபெற்றது.

பின் திருஷ்டி சுற்றுதல், கன்னிகாதானம், மாலை மாற்றுதல், வஸ்திரம் சாற்றுதல் நடைபெற்ற நிலையில் மாங்கல்ய பூஜை சடங்கும் நடைபெற்றன. இதை அடுத்து, தெய்வானை மற்றும் வள்ளிக்கு அடுத்தடுத்து திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக வள்ளி, தெய்வானுடைய மாங்கல்யத்தைச் சுற்றி வைத்த தேங்காயை ஏலம் விடுவதும் வழக்கம். இந்நிலையில் இன்று இந்த தேங்காயை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏலம் விடப்பட்டது.

அந்த ஏலத்தில் பழனி ஆண்டவர், நாகஜோதி தம்பதியினர் 52 ஆயிரம் ரூபாய்க்குத் தேங்காயை ஏலத்துக்கு எடுத்தனர். இதையடுத்து, அவர்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் அறங்காவலர் மற்றும் அறநிலையத் துறையினர் அந்த தேங்காயைத் தம்பதியரிடம் வழங்கினர். இதனை அடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: |
1.“வாராரு… வாராரு… அழகர் வாராரு” மே 8-ல் சித்திரைத் திருவிழா தொடக்கம்! முழு விவரம் உள்ளே! 2.அண்ணாமலையார் கோயிலுக்கு திடீரென சென்ற விசிக தலைவர் திருமாவளவன்! |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்