ETV Bharat / opinion

தலாய் லாமா அமெரிக்க பிரதிநிதிகள் குழு சந்திப்பின் மூலம் சீனாவுக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன? - china Tibet issue us resolution

அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி, தர்மசாலாவில் உள்ள புத்த துறவி தலாய் லாமாவை அவரது இல்லத்தில் அண்மையில் நேரில் சந்தித்து சென்றுள்ளார். இதன் மூலம், சீனா- திபெத் பிரச்னையில், திபெத்துக்கான தமது ஆதரவை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் வருகையை அனுமதித்ததன் மூலம், சீனாவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டையும் இந்தியா தெளிவுப்படுத்தி உள்ளது.

author img

By Major General Harsha Kakar

Published : Jun 28, 2024, 8:20 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

ஹைதராபாத்: அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி, தர்மசாலாவில் உள்ள புத்த துறவி தலாய் லாமாவை அண்மையில் நேரில் சந்தித்து சென்றுள்ளார். இதன் மூலம், சீனா- திபெத் பிரச்னையில், திபெத்துக்கான தமது ஆதரவை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது. நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் வருகையை அனுமதித்ததன் மூலம், சீனாவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டையும் இந்தியா தெளிவுப்படுத்தி உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, இந்தியாவின் தர்மசாலாவில் அடைக்கலம் புகுந்துள்ள புத்த துறவியான தலாய் லாமாவை கடந்த வாரம் சந்தித்தார். அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும், வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, தலாய் லாமாவை சந்தித்தன் ஒரு பகுதியாக நான்சி அவரை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் தர்மசாலாவில் தங்கியிருந்த அவர், சீனா- திபெத் விவகாரத்தில், அமெரிக்கா திபெத்தின் பக்கம்தான் என்பதை, தலாய் லாமா மற்றும் நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசு பிரதிநிதிகளிடம் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

அத்துடன் திபெத்திய மக்கள் மத்தியிலும் பெலோசி உரையாற்றினார். அப்போது அவர்," ஆன்மிகம், அறிவு மற்றும் அன்புடன்கூடிய தலாய் லாமாவின் புகழ், பெருமை என்றென்றும் நீடித்திருக்கும். ஆனால், சீன அதிபர் பதவி உங்களைவிட்டு சென்றுவிட்டால் யாரும் உங்களை எதற்காகவும் புகழமாட்டார்கள்" என்று ஜி ஜின்பிங்கை கடுமையாக சாடி பேசியிருந்தார் நான்சி பெலோசி.

தலாய் லாமாவை சாடிய சீனா: முன்னதாக, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தில் உள்ள அந்நாட்டு அமைச்சர் சோ ஜெங், அமெரிக்க உயர்நிலைக் குழுவின் இந்திய பயணத்தை கடுமை.யாக விமர்சித்திருந்தார். அமெரிக்க எம்.பி.க்கள் குழுவின் பயணம், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாக உள்ளது. இப்பயணத்தை சீனா வன்முறையாக கண்டிக்கிறது" என்று ஜெங் கூறியிருந்தார்.

"யுவான் வம்சம் சீனாவை ஆட்சி செய்த 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது" என்றும் கூறிய சீன அமைச்சர் சோ ஜெங், "அமெரிக்க பிரதிநிதிகளின் இந்தியப் பயணத்தை ஜோ பைடன் அரசு ரத்து செய்ய வேண்டும்" எனவும் கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு அமெரிக்க அரசு செவிமடுக்கவில்லை.

இதனிடையே, "தலாய் லாமா உண்மையான ஆன்மீகவாதி அல்ல. அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்ட அவர், மதம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்" என்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜெய்ன் விமர்சித்திருந்தார்.

டெல்லியில் உள்ள சீன தூதரகமும் தலாய் லாமா குறித்து இதே கருத்தையே தெரிவித்திருந்தது.

பிரதமரை சந்தித்த அமெரிக்க குழு: தலாய் லாமாவை சந்திக்க இந்தியா வந்திருந்த அமெரிக்க உயர்நிலை குழு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்தித்து பேசியது. மோடியுடனான சந்திப்பின்போது, அவர் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் குழு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தது. இக்குழுவினருடனான தமது சந்திப்பு குறித்தும் பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைத்தள பதிவில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அமெரிக்க குழுவின் பயணம் வெற்றிப்பெற இந்தியாவின் ஆதரவை தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க எம்.பி.க்கள் குழுவின் தர்மசாலா பயணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.

தலாய் லாமா மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோதே, அந்நாட்டு எம்.பி.க்கள் குழு அவரை அங்கேயே சந்தித்திருக்க முடியும். அப்படியிருக்கும்போது, இக்குழு காரணம் எதுவுமின்றி தர்மசாலாவுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன், இக்குழுவின் வருகை, மத்திய அரசின் மறைமுகமான ஒப்புதல் இன்றி நிச்சயமாக நிகழ்ந்திருக்காது. இத்தகைய பின்னணியில், அமெரிக்க பிரதிநிதிகளின் இந்திய வருகை சீனாவுக்கு வலுவான செய்தியை கூறுவதாகவே அமைந்துள்ளது.

இந்தியா சீனாவுக்கு சொல்லும் மூன்று செய்திகள்: அமெரிக்க பிரதிநிதிகளின் தர்மசாலா வருகை மூலம், மூன்று செய்திகளை சீனாவுக்கு இந்தியா சொல்லி உள்ளது. முதலாவதாக, தலாய் லாமா மற்றும் அவரது மத நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு உண்டு என்பதை பட்டவர்த்தனமாக இந்தியா வெளிப்படுத்தி உள்ளது.

'மதிப்பிற்குரிய மதத் தலைவரான தலாய் லாமா மீது இந்திய மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவரது மத மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளுக்கு உரிய மரியாதை மற்றும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரின் இந்த கூற்று, தலாய் லாமா மீதான இந்தியாவின் பார்வையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

இரண்டாவதாக இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய கூட்டாளிகள் என்பதையும், திபெத் -சீனா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருநாடுகளும் ஒருங்கிணைந்துள்ளன என்பதும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, தலாய் லாமாவுக்கு தற்போது 88 வயது ஆகும் நிலையில், 15-வது தலாய் லாமாவை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், இந்தத் தேர்வு முற்றிலும் தமது விருப்பத்தின்படி நடக்க வேண்டும் என்றும், தமது சொல்லப் பேச்சுக்கு தலையாட்டும் ஒரு பொம்மை போன்ற ஒருவரை இந்த உயர்ந்த பொறுப்புக்கு நியமிக்க வேண்டும் எனவும் சீனா விரும்புகிறது. ஏனெனில், தலாய் லாமாவாக நியமிக்கப்படுபவர்கள் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரைதான் திபெத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முடியும் என்பதை சீனா நன்கறியும். எனவே, புதிய தலாய் லாமா நியமனத்தில் திபெத் மக்களுக்கு சீனா இப்படியொரு சிக்கலை தருகிறது என்ற முக்கிய செய்தியை, அமெரிக்க உயர்நிலைக் குழு உலகிற்கு தெரிவித்துள்ளது.

அமெரிக்க தீர்மானத்தின் முக்கியத்துவம்: தலாய் லாமாவுக்கு அடுத்தபடியான பஞ்சன் லாமாவை 1995 இல் சீனா நியமித்தது. ஆனால், அவரும் தலாய் லாமாவுக்கு விசுவாசமாக செயல்பட்டார் என்று சீனாவுக்கு தெரியவந்ததும் அவர் காணாமல் போனார். பஞ்சன் லாமா எங்கிருக்கிறார்? அவரின் நிலை என்ன என்பது இதுநாள்வரை தெரியவில்லை. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு மேல் அவர் அரசியல் கைதியாகவே சிறையில் உள்ளார் என்றே தெரிகிறது.

அடுத்த தலாய் லாமா எப்போது நியமிக்கப்பட்டாலும், அவர் தங்களுக்கு விசுவாசமாகவே இருக்க வேண்டும் என்றே சீனா எதிர்பார்க்கிறது. ஆனால், முக்கியமான இந்த விஷயம் குறித்து தலாய் லாமா வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. அதேசமயம் , தமக்கு அடுத்ததாக உயர்ந்த இப்பொறுப்புக்கு வருபவர் சீன கட்டுப்பாட்டு பிராந்தியத்தை சேர்ந்தவராக இருக்க மாட்டார் என்பதை மட்டும் தலாய் லாமா தெளிவுப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், சீனா - திபெத் பிரச்னை குறித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், சீனாவின் தலையீடு இல்லாமல், அடுத்த தலாய் லாமா நியமிக்கப்பட வேண்டும் என்ற திபெத்திய மக்களின் விருப்பத்துக்கு உலகளாவிய ஆதரவை பெற்று தருவதாக அமைந்துள்ளது.

கடந்த 2020 அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருந்த ஜோ பைடன், தான் தலாய் லாமாவை சந்திப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது மீண்டும் அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தலாய் லாமா மருத்துவ சிகிச்சைக்காக கூடிய விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தால், அச்சந்திப்பு அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கு உத்வேகமாக அமையலாம். ஆனால், தலாய் லாமா - பைடன் சந்திப்பு அமெரிக்காவில் நிகழ்ந்தால், அதன் மூலம் சீனாவுக்கு அமெரிக்கா வலுவான செய்தியை கூற முடியுமா என்பதை தெளிவாக சொல்வதற்கில்லை.

தைவானை போல் அல்ல இந்தியா: அதேசமயம், நான்சி பெலோசி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தபோது, கடந்த 2022 ஆகஸ்ட் 2 ஆம் தேதி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்க பிரதிநிதியாக அவர் மேற்கொண்ட இந்த பயணத்தால் ஆத்திரமடைந்த சீனா, தைவான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அத்துடன் சீன கடற்படையின் தாக்குதலுக்கும் தைவான் இலக்கானது. தைவான் மீது தொழில்நுட்பரீதியாக சைபர் தாக்குதலும் அதிகமாக தொடக்கப்பட்டது.

அதேபோன்று, நான்சி பெலோசியின் தற்போதைய இந்திய வருகையால் கோபமடைந்து, தைவானை போல இந்தியாவை சீனா அடக்கிவிட முடியாது. சீனாவுக்கு இணையான ராணுவ பலத்தை பெற்றுள்ள இந்தியா, எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படாத வரை , இருதரப்பு உறவுகள் சமூகமாக இருக்க வாய்ப்பில்லை என்பதை சீனாவுக்கு அழுத்தம் திருத்தமாகவே தெரிவித்துள்ளது. இந்தியா -சீனா இருதரப்பு உறவில் இதேநிலை நீடித்தால், சீனாவுக்கு எதிரான பிற நாடுகளின் நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்கவும் கூடும்

அத்துடன், அமெரிக்க எம்.பி.க்கள் குழுவின் தர்மசாலா வருகையும், தலாய் லாமாவுடனான அவர்களின் சந்திப்பை அனுமதித்துள்ளதன் மூலமும் சீனாவுடனான உறவு குறித்த தமது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது. இந்தியாவில் தற்போது பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அமைந்துள்ள அரசு, அரசியல்ரீதியாக முந்தைய ஆட்சியை விட பலவீனமானதுதான் என்றாலும், அதற்காக வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும் தலாய் லாமா - நான்சி பெலோசி சந்திப்பின் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு உணர்த்தி உள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவுடன் தொடர்ந்து பகையை பாராட்டி கொண்டிருப்பதா அல்லது இருதரப்பு நல்லுறவை மீட்டெடுப்பதா என்பதை தீர்மானிப்பது சீனாவின் கையில் தான் உள்ளது.

இதையும் படிங்க: திபெத் மீதான அமெரிக்காவின் அக்கறை இந்திய - சீன உறவை பாதிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.